Sports | விளையாட்டு
முடிவுக்கு வந்த கிரிக்கெட்.. பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவியை திட்டியதால் மன்னிப்பு கேட்டார்.. எதற்கு தெரியுமா?
இந்தியாவின் முக்கியமான ஆல்ரவுண்டர்களில் இர்பான் பதான் இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம். இர்பான் பதான் அனைத்து கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இது ஒரு சில ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இர்பான் பதான் டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமை பெற்றவர். இதுவரை 29 டெஸ்ட் மேட்ச் 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டிற்குப் பின் எந்த ஒரு போட்டிகளிலும் விளையாடவில்லை, 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டார். இவர் ஓய்வுவை பற்றி தெரிவித்ததால் சக வீரர்கள் மற்றும் உலக அளவில் உள்ள ரசிகர்கள் அவரின் திறமையை புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இர்பான் பதான் இலங்கைக்கு எதிரே நடந்த டெஸ்ட் மேட்சுகளில் தனக்கும் சங்கக்காராவிற்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை நினைவு கூர்ந்து மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார். அதாவது இரண்டாவது இன்னிங்சில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய இர்பான் பதான் 93 ரன்கள் எடுத்து இந்தியாவில் வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
இதனால் சங்கரா, இர்பான் பதானின் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் இர்பான் பதானின் பெற்றோர்களை தவறாக பேசி உள்ளாராம் சங்கக்காரா, அதற்காக கோபமடைந்த இர்பான் பதான் சங்ககாராவின் மனைவியை திட்டி உள்ளாராம்.
இந்த சம்பவத்தினால் எங்கள் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு வெகு நாட்களாக மனதில் காயப்படுத்தி விட்டதாகவும் தான் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வஞ்சம் வைத்து பழி தீர்க்கும் வீரர்களை பார்த்திருப்பீர்கள் ஆனால் வஞ்சம் வைத்து மன்னிப்பு கேட்கும் இது போன்ற வீரர்களை இந்திய அணி வைத்திருந்தது பெருமைதான்.
