Connect with us

Cinemapettai

கோலி கேப்டன் கிடையாது.. வைரலாகுது இர்பான் பதானின் தாறுமாறான ட்வீட்

Sports | விளையாட்டு

கோலி கேப்டன் கிடையாது.. வைரலாகுது இர்பான் பதானின் தாறுமாறான ட்வீட்

கங்குலி வெளிநாடுகளிலும் இந்தியா ஜெயிக்கும் என நிரூபித்தவர். தோனி சேஸிங்கில் இந்தியா வெற்றி பெரும் என நிரூபித்தவர். அந்தவரிசையில் கோலி இந்தியா பிட் ஆன சூப்பர் பீல்டிங் டீம் என உலகிற்கு காட்டியுள்ளார் என்றால் அது மிகையாகாது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கோலி தலைமையில் இந்தியா டீம் வேற லெவல். டி 20 பார்மட்டில் மற்றும் கொஞ்சம் பின் தங்கியுள்ளது என சொல்லலாம். எனினும் அடுத்தடுத்து நடக்கும் டி 20 உலகக்கோப்பையில் இந்தியா டீம் அசத்தும் என நம்புவோம்.

சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து தன் ஒய்வை அறிவித்த இர்பான், விராட்  பற்றி பதிவிட்ட ட்வீட் பலரின் கவனத்தை பெற்று வருகிறது. இலங்கையுடனான டி 20 போட்டியை இந்தியா ஜெயித்த பின் இந்த ஸ்டேட்டஸை அவர் தட்டியுள்ளார்.

“கேப்டனாக இருப்பது ஒரு ரகம், தலைவனாக இருப்பது வேற ரகம். விராட் கோலி தரமான தலைவன் தான். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க தன் பேட்டிங் பொசிஷனை விட்டுக்கொடுத்து ஊக்குவிக்கிறார், டீம்மை சிறப்பானதாக உருவாக்குகிறார். வாழ்த்துக்கள் தலைவா.” என பதிவிட்டுள்ளார்.

இரண்டாவது டி 20 போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் அவர்களை தன் இடத்தில இறக்கினார். மூன்றாவது போட்டியில் சஞ்சு சாம்சனை இறக்கினார், மேலும் விராட் 6 ஆம் நம்பரில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top