fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அண்ணன் யுசுபுக்கு ஆதரவாக, ஆதாரத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட இர்பான் பதான்.

Sports | விளையாட்டு

அண்ணன் யுசுபுக்கு ஆதரவாக, ஆதாரத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட இர்பான் பதான்.

ஐபில் போட்டிகள் விறுவிறுப்பான இரண்டாம் பாதியில் உள்ளது. வழக்கம் போல சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. மும்பை, டெல்லி என அடுத்தடுத்து லயன் கட்டி நிற்கின்றது அணிகள்.

சன்ரய்சர்ஸ் ஹைதெராபாத் அணி புள்ளி பட்டியலில் தற்பொழுது நான்காவது இடத்தில் உள்ளது. 6 போட்டிகளில் தோல்வி, ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. புவனேஸ்வர் குமார், ரஷித் கானின் அசத்தல் பந்து வீச்சு, வார்னர், பேர்ஸ்டோவின் சூப்பர் பேட்டிங் தான் இந்த சீசன் டீமின் நிலவரம்.

மத்திய வரிசை பேட்டிங்கில் இந்த டீம் சற்றே சொதப்பி தான் வருகின்றது. விஜய் ஷங்கர் தவிர யூசுப் பதான், மொஹமட் நபி, சாகிப் அல் ஹசன், தீபக் ஹூடா, மனிஷ் பாண்டே என்று பலரும் ஆடினாலும், யாரும் பெரிதாக சோபிக்கவில்லை.

இந்நிலையில் யூசுப் பதான் பார்ம் அவுட், ஆல் ரௌண்டராக அவர் காலம் முடிந்தது என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பி இர்பான் ட்விட்டரில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

“9 போட்டிகளில் 5 நாட் அவுட், இரண்டு போட்டிகளில் பேட்டிங் இறங்கவில்லை. மொத்தமாகவே இந்த ஐபில் இல் 41 பந்துகள் தான் எதிர்கொண்டுள்ளார். அவரை பற்றி விமர்சிப்பவர்கள் இதை மறக்கவேண்டாம். தனி ஆளாக மேட்சை ஜெயிக்கும் வீரகளில் மத்தியவரிசைக்கும் கீழே கீழே ஆடுபவர் இவர் மட்டும் தான். அப்படி இருந்தும் 16 மேன் ஆப் தி மேட்ச் விருதுகள் பெற்றுள்ளார்.”

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top