fbpx
Connect with us

இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரை விமர்சனம்.

Reviews | விமர்சனங்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரை விமர்சனம்.

அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள ஆக்ஷன், திரில்லர் படம். இப்படத்தை அறிமுக இயக்குனர் மு.மாறன் இயக்குகியுள்ளார். இவர் ராகவா லாரன்ஸ் , கே.வி.ஆனந்த் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். தனது அறிமுக படத்தை க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாக்கியதற்கு இவரை கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும். அடுத்ததாக அறிமுக படத்திலே அருள்நிதி, மஹிமா நம்பியார், சாயா சிங், ஜான் விஜய், அஜ்மல், சுஜா வருணீ, வித்யா பிரதீப், லட்சுமி ராமகிருஷ்ணன் என பெரிய நட்சத்திர பட்டாளத்தையே கையாண்டுள்ளார்.

கதை

இது திரில்லர் படம் என்பதை உணர்த்தவேண்டும் என்பதற்காக போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் பிளாஷ் பாக்கில் செல்கிறது கதை. எந்த ஒரு தனி நபரும் சொல்லும் விதமாக அமையாமல் கதை தனி தனி எபிசோட் பாணியில் நகர்கிறது.

IAK

கால் டாக்ஸி ஓட்டுநராக அருள்நிதி, அவர் சந்திக்கும் நபர்கள், உரையாடல்கள். ஹீரோவின் காதலியான மஹிமா அவர் சந்திக்கும் நபர்கள் அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் என நகர்கிறது கதை. திருமணமா முடிந்தும் மனவேறுபாட்டால் ஒரே வீட்டில் தனித்து வாழும் ஜான் விஜய் – சாயா சிங். கணவர் இறந்த பின் எழுதுவதை நிறுத்திவிட்ட எழுத்தாளர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஹீரோயினை துரத்துவது, தவறுகள் செய்யும் வில்லன் அஜ்மல். பேஸ் புக் வாயிலாக பலிக்கடா ஆகும் ஆனந்தராஜ் , ஆடுகளம் நரேன் என அசத்தல் கதாபாத்திர வடிவமைப்பு இப்படத்தில்.

நடந்தேறும் கொலை, அதை செய்தது யார் என்பதை இடியாப்ப சிக்கலாக விவரித்துள்ளார்.

சினிமாப்பாட்டை அலசல்

Mahima Nambiyar

முதல் பாதி ஸ்லோவாக சென்றாலும், இரண்டாம் பாதி நம்மை சீட் நுனியில் உட்காரவைத்து சஸ்பென்ஸ் எகிறவைத்துவிடுகிறது. நாம் செய்தித்தாளில் படிக்கும் பல விஷயங்கள் படத்தின் கதையில் உள்ளது. துருவங்கள் 16 , திருட்டு பயலே படங்களை பல காட்சிகள் நமக்கு நினைவு படுத்துகின்றது. ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் என்று செல்கிறது.

பிளஸ்

நடிகர் நடிகைகள் தேர்வு, பின்னணி இசை, கதை, ஒளிப்பதிவு.

மைனஸ்

வில்லன் டீம் சித்தரிப்பு, ஸ்லொவாக செல்லும் முதல் பாதி, தெளிவான சித்தரிப்பு இல்லாமல் கட் செய்யப்பட்ட காட்சிகள்.

சினிமா பேட்டை ரேட்டிங் 3.25 / 5

சினிமாபேட்டை வெர்டிக்ட்

அருள்நிதி வழக்கம் போல அருமையான ஸ்கிரிப்ட் தேர்ந்தெடுத்துள்ளார். மசாலா படங்கள், ஏ சமாசார படங்கள் பார்த்த நமக்கு இது வித்யசமான அனுபவம். சின்ன குழந்தைக்கு கதை சொல்வது போல இல்லாமல், நம் சினிமா ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை இயக்கிய இயக்குனருக்கு ஸ்பெஷல் பாராட்டு.

iravukku-aairam-kangal

எனினும் காட்சிகள் நடக்கும் நாள், நேரம் போன்றவற்றை தெளிவாக சப் டைட்டில் வடிவில் போட்டிருக்கும் பட்சத்தில் இப்படம் சி சென்டர் ரசிகர்களுக்கும் எளிதில் புரிந்திருக்கும். பல இடங்களில் பக்கத்தில் உள்ளவரிடம் என்ன நடக்குது என்பதை கேட்கும் நபர்களின் எண்ணிக்கையே அதிகம்.

கிளைமாக்ஸில் ட்விஸ்ட் வைத்து, ரசிகர்களின் கற்பனை திறனுக்கு ஏற்றபடி விட்டது சிறப்போ சிறப்பு. கண்டிப்பாக இரண்டாவது பார்ட் வந்தால் அதையும் கட்டாயம் பார்க்கணும் என்ற நினைப்போடு நம்மை வெளியே வர வைத்தது தான் இந்த டீமின் வெற்றி என்று சொல்ல வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top