fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மரண பயத்தை காட்டும் பார்த்திபனின் இரவின் நிழல் டீசர்.. மிரட்டலான இசையில் மூழ்கடித்த ஏ ஆர் ரகுமான்

iravin-nizhal-ar-rahman

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மரண பயத்தை காட்டும் பார்த்திபனின் இரவின் நிழல் டீசர்.. மிரட்டலான இசையில் மூழ்கடித்த ஏ ஆர் ரகுமான்

வித்யாசமான படைப்பின் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துபவர்தான் நடிகர் பார்த்திபன். தற்போது ஒரு புது முயற்சியாக ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியுள்ளார். பலரும் இது சாத்தியமே இல்லை என நம்ப மறுத்த நிலையில் எல்லாம் சாத்தியமே என அதை முடித்துக் காட்டி உள்ளார் பார்த்திபன்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி, ரோபோ ஷங்கர், பிரியங்கா ருத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். டீசரின் ஆரம்பத்தில் தொடங்கிய இசைப்புயலின் இசை இறுதி வரை நம்மை மூழ்கடிக்கிறது.

மேலும் படம் முழுக்க இருளில் நடக்கும் காட்சிகளாகவே அமைந்துள்ளது. இப்படத்தில் கர்ப்பம் முதல் கல்லறை வரை அனைத்து காட்சிகளையும் ஒரே ஷாட்டில் எடுத்து இருக்கிறார் என்பது பலரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பசியும், பணமும் தான் மனிதனை கடைசிவரை துரத்துகிறது என்பதை மையக் கருத்தாக கொண்டு இரவின் நிழல் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் தற்போது பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பார்த்திபன், ஏ ஆர் ரகுமான் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இப்படத்திற்கும் கின்னஸ் மற்றும் ஆஸ்கர் விருது கிடைக்கும் என பார்த்திபனை பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே இப்படத்தில் ஆஸ்கர் விருது வென்ற 3 பேர் பணியாற்றி உள்ளனர். அதில் ஏ ஆர் ரஹ்மானும் ஒருவர்.

மேலும், 96 நிமிடங்கள் இரவின் நிழல் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்திற்கு ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top