பலான காட்சிகளில் நடிக்கவே இல்ல.. இரவின் நிழல் நடிகை விட்ட கட்டுக்கதை, தண்டவாளத்தில் ஏறிய வண்டவாளம்

iravin-nizhal-movie
iravin-nizhal-movie

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த இரவின் நிழல் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்திற்கு பாராட்டுக்கள் எவ்வளவு கிடைத்ததோ, அதே அளவுக்கு சர்ச்சைகளும் வந்தது. அதிலும் அப்படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

அப்படிப்பட்ட சர்ச்சையான ஒரு காட்சியில் பிரபல சீரியல் நடிகை ரேகா நாயர் நடித்திருந்தார். படத்திற்கு அந்த காட்சி முக்கியமானதாக இருந்தாலும் அப்படி ஒரு கேரக்டரில் நடித்த ரேகா நாயர் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. அதாவது அவர் குறிப்பிட்ட அந்த சென்டிமென்ட் காட்சியில் மேலாடை இல்லாமல் நடித்திருந்தார்.

Also read: சினிமால மட்டும் அந்த தொழில் இல்ல, உடல் தேவைக்காக குடும்ப பெண்களும் இத செய்றாங்க.. சர்ச்சையை கிளப்பிய இரவின் நிழல் நடிகை

அதனாலேயே அந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. மேலும் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் கூட அந்த காட்சியை விமர்சித்ததை பார்த்த ரேகா நாயர் அவருடன் மல்லுக்கு நின்றார். அது மட்டுமில்லாமல் அந்த காட்சியில் நான் முழுவதுமாக மேலாடை விலகி நடிக்கவில்லை என்றும் நீங்கள் நான் அப்படி நடித்ததை பார்த்தீர்களா என்றும் பேட்டி எடுத்தவர்களை எல்லாம் கண்டபடி திட்டி இருந்தார்.

ஆனால் அவர் கூறியது அத்தனையும் பொய் என்று தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது அந்த குறிப்பிட்ட காட்சியில் ரேகா நாயர் மேலாடை இல்லாமல் தான் நடித்திருக்கிறார். அதன் பிறகு அந்த காட்சி தியேட்டர்களில் ரசிகர்களின் பார்வைக்கு சில மாறுதல்கள் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்காக அவர் மாற்றி பேசினார் என்று தெரியவில்லை.

Also read: நீ ஏண்டி என் காலத்துல இல்லாம போன.. பாரதிராஜாவை ஏங்க வைத்த இரவின் நிழல் நடிகை

எதையும் கூச்சப்படாமல் தைரியமாக பளிச்சென்று பேசும் ரேகா நாயர் தற்போது இந்த விஷயத்தை எதற்காக மூடி மறைத்தார் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. மேலும் இப்படி ஒரு காட்சியில் அவர் துணிந்து நடிப்பதற்கு எப்படி சம்மதித்தார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சர்ச்சைக்கு பயந்து தான் அவர் இப்படி ஒரு விஷயத்தை மறைத்து பேசி இருக்க வேண்டும்.

தற்போது இந்த விஷயத்தை மீடியா பிரபலமான வித்தகன் சேகர் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். அதாவது அவர் அந்த காட்சியை சென்சார் செய்யப்படுவதற்கு முன்பே பார்த்ததாகவும் ரேகா நாயர் மேலாடை இல்லாமல் தான் நடித்திருந்தார் என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த தகவலுக்கு ரேகா நாயரின் பதில் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also read: அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் நடிகைகள் என்ஜாய் பண்றாங்க.. அம்பலப்படுத்திய இரவின் நிழல் நடிகை

Advertisement Amazon Prime Banner