படு மோசமாக வெளியான இரண்டாம் குத்து டீசர்.. ஆபாசத்தின் உச்சம்!

நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் 18+ படமாக வெளிவந்த திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படம் முழுக்க முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் நிறைந்திருந்தன.

இளைஞர்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைக் குவித்தது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருந்தது. இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சமீபத்திய கவர்ச்சி கன்னியாக வலம் வரும் ஷாலு ஷம்மு போன்றோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தலங்களிலேயே இரண்டு நடிகைகள் உதட்டு முத்தம் கொடுத்துக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இரண்டாம் குத்து என டைட்டில் வைத்துள்ளார்கள். தற்போது ஆர்யா இந்த படத்தின் டீசெர் வெளியிட்டுள்ளார்.