Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-kuthu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உங்க பட நடிகையை நீச்சல் உடையில் பாக்குறப்போ சுகமா இருந்துச்சா? பாரதிராஜாவை கிழித்த இரண்டாம் குத்து இயக்குனர்

ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என்று அடல்ட் படங்களை இயக்கி பல பேரிடம் திட்டு வாங்கிக் கொண்ட இயக்குனர் தான் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இந்நிலையில் தானே கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்த படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த படத்திற்கு இரண்டாம் குத்து என பெயரிட்டு அந்த படத்தின் டீசரை நேற்று வெளியிட்டார்.

போஸ்டர்களில் ஆபாசம் உச்சகட்ட நிலையில் இருந்த நிலையில், டீசரில் அதைவிட அபத்தமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அவர் நினைத்த மாதிரி அந்த டீஸர் தற்போது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. தன்னை திட்டினாலும் அதை ப்ரோமோஷன் ஆக மாற்றி படத்தை பெரிய அளவில் வியாபாரம் செய்ய முடிவு செய்துவிட்டாராம்.

இது ஒருபுறமிருக்க, நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும் பார்ப்பதற்கு கண் கூசுகிறது எனவும் தெரிவித்தார்.

bharathi-raja-cinemapettai

bharathi-raja-cinemapettai

அதற்கு உடனடியாக பதில் அளித்த சந்தோஷ், உங்க டிக் டிக் டிக் படத்தில் நடிகைகளை நீச்சல் உடையில் பார்க்கும்போது உங்களுக்கு அப்படித் தோன்றவில்லையா? என நெற்றி பொட்டில் அடித்தது போல் ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.

tiktiktik-sandhosh

tiktiktik-sandhosh

இதற்கு பாரதிராஜா பதில் சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
To Top