கதை

ஒவ்வொரு பெண்களின் வலி, இன்பம், துன்பம் அனைத்தையும் சில ஆண்கள் வழியாக உணர்த்தியிருப்பதே இந்த இறைவி. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோளுக்கு இனங்க படத்தின் கதை பற்றி எதையும் விரிவாக தெரிவிக்கவில்லை

விமர்சனம் 

மழை நல்லாருக்குல…நனையலாமா….ஹிம்ம்…நனையலாம் ஆனால், நனைந்திடுவோமே’ என்று அஞ்சலி கூறும் வசனத்தோடு படம் தொடங்குகிறது. இந்த ஒரு வசனம் தான் படத்தின் மொத்த கதையும் கூட. ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சுதந்திரத்தை ஏதோ ஓர் ஆணிடம் எதிர்ப்பார்க்கிறார்.

அது அவர்கள் தவறு இல்லை, அவர்களுடைய அம்மா, அம்மாவுடைய அம்மாவின் வளர்ப்பில் உள்ள தவறு என உறைக்க சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.எஸ்.ஜே.சூர்யா இப்படி ஒரு நடிகனை தான் நாம் இத்தனை நாட்கள் தொலைத்துக்கொண்டு இருந்தோம் என பின்னி பெடலெடுத்து இருக்கிறார்.

பெண்களுக்கான சுதந்திரத்தை நாம் இன்னும் 30%, 50 % என கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். ஆண்கள் யார் அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்க, எனக்கான சுதந்திரத்தை நானே எடுத்துக்கொள்வேன் என்பது போல் ஒரு கதாபாத்திரம் பூஜா.

பாபி சிம்ஹா என்ன கெஸ்ட் ரோல் போல் வருகிறார், போகிறார் என்று பார்த்தால், கிளைமேக்ஸில் பெரிய திருப்பமே இவரால் தான் வருகிறது. ஜிகர்தண்டாவிற்கு பிறகு தடுமாறிய பாபியை மீண்டும் கார்த்திக் கரையேற்றிவிட்டார்.

படத்தின் டெக்னிக்கல் விஷயத்தில் கார்த்திக் மிகவும் கவனம் செலுத்தியிருக்கிறார். பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் வழக்கம் போல் உயிர் கொடுக்கிறார். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு குறித்து சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஷாட் போதும், எஸ்.ஜே.சூர்யா, பாபி, விஜய் சேதுபதி குடிக்கும் போது ஒரு லைட்டின் வெளிச்சம் பாட்டிலில் பட்டு பிரதிபலிப்பதை கூட அத்தனை அழகாக காட்டியுள்ளார்.

மொத்தத்தில் இறைவி ஜெயித்துவிட்டாள்

ரைடிங் 3.5/5