தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நல்ல படம் என்றால் கண்டிப்பாக ரசிப்பார்கள், ஆதரவு தருவார்கள். அதே நேரத்தில் ஓவர் பில்டப் கொடுத்து சுமாரான படம் கொடுத்தால் கூட கலாய்த்து எடுத்துவிடுவார்கள்.

இவர்கள் தான் உண்மையான ரசிகர்கள் ஆனால், சில அதிமேதாவி உலக சினிமா ரசிகர்கள் வெள்ளைக்காரன் வெள்ளை காகம் பறக்கின்றது என்றாலும் ரசிப்பார்கள், தமிழ்நாட்டில் ஒரு படம் எடுத்தால் 2 கோடி மிஸ்டேக் கண்டுப்பிடிப்பார்கள்.

அதையும் தாண்டி வேறு யாராவது ஒரு நல்ல படம் எடுத்துவிட்டால், இது கொரியன் படத்தின் காப்பி என்று சிம்பிளாக கூறிவிடுவார்கள். அப்படி தான் ஜிகர்தண்டா படத்தை அந்த படத்தின் காப்பி, இந்த படத்தின் காப்பி என ரைடு விட்டார்கள்.

அதிகம் படித்தவை:  கார்த்திக் சுப்பராஜிற்கு தயாரிப்பாளர் சங்கம் "ரெட் கார்டு"?

ஆனால், இதையே படத்தின் ப்ரோமோஷனாக பயன்படுத்தி ஹிட் அடித்தது படக்குழு. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ஒருவர் ஜிகர்தண்டா படத்தை இந்த கொரியன் படத்தின் காப்பி என்றார், அதற்கு ஒரு ரசிகர் இதே கதைக்களத்தில் ரெட் படம் முன்பே வந்து விட்டதே அப்போ ரெட் படம் பார்த்து தான் அந்த கொரியன் படத்தை எடுத்தார்களா? என பதிலடி கொடுத்தார்.

அதிகம் படித்தவை:  கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் உதயநிதி!

உடனே அந்த உலக சினிமா ரசிகர் வழக்கம் போல் என்ன சொல்லியிருப்பார், உனக்கு சினிமா அறிவு இல்லை, உன்னிடம் பேச முடியாது என பின் வாங்கிவிட்டார். அதேபோல் இந்நேரம் இறைவியும் எந்த கொரியன் படத்தின் காப்பி என்று கண்டிப்பிடிக்க ஒரு கும்பல் தனிப்படை வைத்து வேலைப்பார்க்கும்.

நமக்கு எதுக்குங்க அதெல்லாம், இறைவி ஒரு நல்ல படம் கண்டிப்பாக… அவ்வளவு தான், அவர்கள் கண்டிப்பிடித்து சொல்லட்டும்.நாம் படத்தை பார்த்து நன்றாக இருக்கிறதா? இல்லையா? அதை மட்டும் சொல்வோம். விரைவில் #சிலwoMENகளின்கதை.