சசிகலாவை புரட்டிப்போட்ட பெண் ஐ.பி.எஸ் ரூபா தற்போதைய நிலைமை தெரியுமா?

கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் ரூபா தனது திறமை மற்றும் நேர்மையினால் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலாவின் சிறையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாக  வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் சகாயம் போல் நேர்மையாக இருந்ததற்காக இவர் பலமுறை பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நியாயத்திற்காக போராடுபவர்கள் இது போன்ற பிரச்சினைகளை சமூகத்தில் சந்திப்பது சகஜமாகிவிட்டது.

இது போன்று நேர்மையாகச் செயல்பட்டு குற்றவாளிகளை நடுநடுங்க வைத்து தண்டனை வாங்கிக் கொடுப்பார். இதுமட்டுமல்லாமல் இவர் இந்துஸ்தான் இசையை கற்று உள்ளாராம், சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு பாடலை பாடி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இசையிலும் தனக்கு திறமையுள்ளது என்பதை வெளிபடுத்தியுள்ளார்.

தற்போது இதைக் கண்ட ‘பேயலதாதா பீமண்ணா’ படக்குழுவினர் ஒரு புதிய படத்தில் பாட அழைப்பு விடுத்து அதற்க்கு விருப்பமும் தெரிவித்துள்ளாராம். இது போன்ற திறமையான பெண்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற வேண்டும்.

Leave a Comment