Sports | விளையாட்டு
ஐ.பி.எல்-2020 நடக்குமா.? T20 உலக கோப்பையில் தல தோனி உண்டா.? சோதித்து பார்க்கும் பிசிசிஐ
இந்த மாதம் 29ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐ.பி.எல்-2020 மேட்ச் கொரோனா வைரஸ் பீதியால் தள்ளிப் போகலாம் என்ற செய்தி ரசிகர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்குதல் இந்தியாவிற்கும் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வரும் இந்த நிலையில் ஐ.பி.எல் நடக்குமா? நடக்காதா? என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் திடீர் திருப்பமாக ஐபிஎல்-2020 முடிந்தபின் வரும் டி-20 உலக கோப்பையில் தோனியின் IPL திறமையை வைத்து கண்டிப்பாக களம் காண்பார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதற்காக தோணி முழு முயற்சி எடுத்து வருவதாகவும் கண்டிப்பாக ஆட வேண்டும் என்று ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேறுமா?

dhoni
நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தோனியிடம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தோனியின் ரசிகர்கள் சற்று கிரிக்கெட்டை மறந்துவிட்டார்கள் என்று கூறலாம்.
ஆதலால் இந்த செய்தி பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. தல தோனிக்கு உலக அளவில் ரசிகர்களின் ஆதரவை வைத்து இந்த முடிவு எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. என்ன தான் வயசானாலும் சிங்கம் சிங்கம் தானே, காட்டை ஆளும் சிங்கமும் கிரிக்கெட்டை ஆளும் தோனியும் ஒன்றுதான்.
