Connect with us
Cinemapettai

Cinemapettai

ipl2020

Sports | விளையாட்டு

ஐபிஎல் 2020 கட்டாயம் நடக்குமாம்.. ஆனால் எங்கே தெரியுமா? அங்கதான் ட்விஸ்ட்

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட்டின் மோகம் என்றுமே அதிகரித்தவனமே உள்ளது. காவஸ்கர், கபில், சச்சின், தோனி, கோலி என வீரர்கள் மாறினாலும் ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்தபாடில்லை. அதிக நாட்களாக இந்திய டீம் களம் இறங்காமல் இருந்தது இதுவாக தான் இருக்கும். இதற்கு கொரோனா அபாயம் தான் உபயம்.

ஏப்ரல் – மே மாதத்தில் நடக்கும் ipl போட்டிகளும் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவில் இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற வாய்ப்பில்லை எனவும், வேறு நாட்டில் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறலாம் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் முன்பே தகவல் அளித்தார்.

இந்தாண்டு டி 20 உலக கோப்பை தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐ சி சி ஜூலை மாதம் இறுதியில் டி 20 பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, அந்த அறிவிப்பை பொறுத்ததே ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

“தற்பொழுது நிலவும் சூழ்நிலையில் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் என்பது சாத்தியமில்லாத ஒன்று. பல நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இங்கு வர வேண்டி இருப்பதால் நிச்சயம் அது கடினமான ஒன்றாகவே அமையும்.

இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஐ.பி.எல் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் ஏதேனும் ஒரு நாட்டில் வைத்து அங்குள்ள சூழ்நிலையை பொறுத்து போட்டிகள் நடைபெறலாம்’ என பிசிசிஐக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

ஏற்கனவே முன்பு 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் அனைத்து போட்டிகளும் தென்னாப்பிரிக்காவிலும், 2014 ஆம் ஆண்டு முதல் 20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றதது. அதே போல் இம்முறையும் வேறு நாட்டில் தான் நடக்குமாம் ஐபிஎல்.

Continue Reading
To Top