ஐபிஎல் வேஸ்ட், பிஎஸ்எல் பெஸ்ட்.. மட்டம் தட்டிய பாகிஸ்தான் வீரர்களின் மூக்கை உடைத்த இந்திய வீரர்

ஐபிஎல் இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் விருவிருப்பான 20 ஓவர் போட்டி. அதன்பின் நிறைய நாடுகள் அதை பின்பற்றி ஒவ்வொரு நாட்டிலும், ஐபிஎல் போன்ற போட்டிகளை ஆரம்பித்து விட்டனர்.

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் அதே மாதிரியாக போட்டிகளை ஆரம்பித்துவிட்டனர். இப்பொழுது பாகிஸ்தானில் பிஎஸ்எல் எனப்படும், ஐபிஎல் லிற்கு நிகரான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதற்காக பாகிஸ்தானில் பங்களாதேஷ் வீரர்களும் ,ஆப்கானிஸ்தான் வீரர்களும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் பொழுது மார்க்கெட்டில் அந்த தொடருக்கு எந்தவித போட்டியாளரும் இல்லை. அதன் பின்னரே ஒவ்வொருநாட்டிலும் இந்த மாதிரி போட்டிகள் ஆரம்பித்தனர்.

இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது 2016ம் ஆண்டு தொடங்கிய பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மிக குறுகிய நேரத்தில் உலக அளவில் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக், இந்தியன் சூப்பர் லீக் கைவிட தகுதியானது, நிறைய ரசிகர்களை கொண்டுள்ளது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா மற்றும் ரசித் லத்தீப் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ராபின் உத்தப்பா அதிரடியான பதில் ஒன்றை கொடுத்து இருந்தார். மார்க்கெட்டை உருவாக்கியதே ஐபிஎல் தான். ஐபிஎல் போட்டிகள் இல்லாவிட்டால் உலகில் இந்த மாதிரியான போட்டிகளுக்கு மார்க்கெட் இருந்திருக்காது என்பது போல சாமர்த்தியமாக பதில் கொடுத்து மூக்கை உடைத்துள்ளார் உத்தப்பா. 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்