Sports | விளையாட்டு
வீரர்களை மாற்றிக்கொண்ட மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி.. IPL 2020
புதிய சீசன் துவங்கும் முன்னதாக டீம்கள் தங்களுக்குள் வீரர்களை ட்ரான்ஸபார் செய்யலாம், வேறு சிலரை வேண்டாம் என ரிலீஸ் செய்துவிடலாம். அதன் வாயிலாக ஏலத்திற்கு முன்பு கையில் இருக்கும் பணம்; தக்கவைத்துள்ள வீரர்கள் என புதிய துவக்கமாக இருக்கும்.
முன்பே கிசுகிசுக்கப்பட்டது தான் பஞ்சாபின் ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி காப்பிடல்ஸ் அணிக்கு செல்வார் என்பது. அது கடந்த வாரமே நிகழ்ந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த சில மாற்றங்கள் பற்றி பார்ப்போம்.
மும்பை இந்தியன்ஸ் அணி நியூஸிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் அவர்களை டெல்லி டீம்மிடம் இருந்து வாங்கியுள்ளனர். மாற்று வீரர் யாரையும் தராமல் முழுவதாமன ஏலத்தொகை 2. 2 கோடி கொடுத்துள்ளனர்.
மேலும் ராஜஸ்தான் அணியிடம் இருந்து தவல் குல்கர்ணி அவர்களையும் வாங்கியுள்ளனர்.
பஞ்சாப் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் டீமிற்கு அன்கிட் ராஜ்புட் என்ற வேகப் பந்துவீச்சாளரை கொடுத்து ஸ்பின் ஆல் ரவுண்டர் கே கவுதம் அவர்களை வாங்கியுள்ளனர்.
இன்றுடன் ட்ரான்ஸ்பர் செய்யும் நேரம் முடிவடைகிறது. அதற்கு எந்த டீம் என்னென்ன மற்ற செய்யவார்கள் என காத்திருப்போம்.
