Sports | விளையாட்டு
IPL போட்டி அட்டவணை அறிவிப்பு.! முதல் போட்டி யாருடன் எங்கு நடக்கிறது இதோ விவரம்
ipl அட்டவணை அறிவிப்பு, முதல் போட்டி எங்கு நடக்கிறது, யாருடன் மோதுகிறார்கள் இதோ விவரம்.
ஐபிஎல் இதுவரை 11 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது தற்பொழுது 12 வது சீசன் வெற்றிகரமாக நடைபெற இருக்கிறது, ஆனால் இந்த 12 வது சீசன் முழுவதும் வெளிநாட்டில் தான் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஏன் என்றால் தமிழ் நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் அவ்வாறு எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால் தற்பொழுது வந்துள்ள அட்டவணைப்படி முழு போட்டியும் இந்தியாவிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அதுவும் மீதமுள்ள போட்டிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்கள்.

ipl
இந்த நிலையில் மார்ச் 23 ம் தேதி IPL 12 வது சீசன் தொடங்கும் என அறிவித்து 23 ம் தேதி முதல் ஏப்ரல் 5 ம் தேதி வரை நடைபெறும் போட்டிக்கான அட்டவணை அறிவித்துள்ளார்கள் , கடந்த சீசனில் சிஎஸ்கே அணியும் மும்பை அணியும் மோதியது அதேபோல் இந்த சீசனில் முதல் போட்டி சி எஸ் கே வுக்கு தான் என அறிவித்துளர்கள்.
மார்ச் 23 ம் தேதி நடக்கும் போட்டியில் தோனி அணியும் ஆர்பிசி அணியும் மோதுகின்றன.

ipl
