Sports | விளையாட்டு
ஐபிஎல் போட்டி நடக்க வாய்ப்பு இருக்கிறதா? கங்குலியின் முதல் வருடமே இப்படி படுத்துவிட்டதே
மார்ச் 29ஆம் தேதி ஐ.பி.எல் டி20 போட்டிகள் மும்பையில் தொடங்க இருந்தது, ஆனால் மும்பை அரசு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனுமதி இல்லை என்று கூறி டிக்கெட் விற்பதற்கு தடை விதித்தது. கொரோன வைரஸ் பாதிப்பு இந்திய அளவில் இருப்பதால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
இதனை அடுத்து டெல்லி சர்க்கார் ஐபிஎல் மேட்ச் நடத்துவதற்கு தடை விதித்துள்ளது. மொத்தமாக அனைவரும் கேட்டை போடுவதால் பிசிசிஐ தலைசுற்றி போய்விட்டது. இதனால் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் குழுவினர்களுடன் சேர்ந்து தற்போது ஐபிஎல் மேட்ச் ஏப்ரல் 15ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்தால் ஐபிஎல் போட்டி முற்றிலும் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்தியாவில் இந்த கொரோன வைரஸ் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் போராடி வருகின்றனர்.
இந்த வைரஸ் பாதிப்பால் அடித்தட்டு மக்கள் வரை வாழ்வாதாரம் பாதிக்கப்படும், முக்கியமாக விளையாட்டுத்துறை, சினிமாத்துறை, தொழிற்சாலைகள், ஷாப்பிங் மால், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம்.
ஆனால் தமிழகத்தில் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் மக்களுக்காக இரவு பகலாக நாங்கள் உழைக்கிறோம் என்று கூறியுள்ளார்.
