Connect with us
boomerang-movie

ஸ்மித், வார்னருக்கு மாற்றாக இந்த சீசனில் ஆடப்போகும் வீரர்களை முடிவு செய்தது அணி நிர்வாகம். ஐபில் 2018 .

News | செய்திகள்

ஸ்மித், வார்னருக்கு மாற்றாக இந்த சீசனில் ஆடப்போகும் வீரர்களை முடிவு செய்தது அணி நிர்வாகம். ஐபில் 2018 .

தென்னாப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஐசிசி கூட சிறு தணடனையுடன் விட்டு விட, கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிரடி நடவடிக்கை எடுத்து. தலைவர் ஸ்மித் மற்றும் துணை தலைவர் வார்னருக்கு 12 மாத தடையும், பாங்க்ராப்ட் அவர்களுக்கு 9 மாத தடையும் விதித்தது. இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைராபாத் வேறு வீரர்களை கேப்டனாக சூழல் வந்தது.

ஐபில் போட்டிகளின் 11 வது சீசன் இந்த வாரம் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 தொடங்கி மே மாதம் 27 வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த அணிகள் மாற்று வீரராக யாரை எடுத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

சன்ரைஸர்ஸ் ஹைராபாத் – அலெக்ஸ் ஹேல்ஸ் – இங்கிலாந்து

Alex Hales

ஆரம்பம் முதலே சன்ரைஸர்ஸ் அணி வர்னருக்கு ஆதரவு தரும் விதமாகவே செயல்பட்டனர். எனினும் இறுதியில் வேறு வழி இல்லாமல் இந்த அணி நிர்வாகம் இந்த சீசனுக்கு மட்டும் நியூ ஸிலாந்தில் கனே வில்லியம்சனை தலைவராகவும், புவனேஸ்வர் குமாரை துணை தலைவராகவும் அறிவித்தது.

இந்நிலையில் வர்னருக்கு மாற்றாக இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அவர்களை பேஸ் விளையான ஒரு கோடியில் ஒப்பந்தம் செய்துள்ளது. ஹேல்ஸ் சில மாதங்களுக்கு முன் கிளுப்புக்கு வெளியில் நடந்த அடிதடியில் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் உடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து சர்வதேச டி 20 அணியில் சத்தம் நடித்துள்ள ஒரே வீரர். அதிரடி துவக்க ஆட்டக்காரர் என்பதால் வார்னருக்கு பதில் இவர் தான் தவானுடன் ஒபெநிங் இறங்குவார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி ஒரு நாள் மற்றும் டி 20 யில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் இவர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் – ஹென்ரிச் கிளாஸ்ஸன் – தென் ஆப்பிரிக்கா .

இரண்டு வருட தடை முடிந்து வந்துள்ளது ராஜஸ்தான். எனினும் போட்டி துவங்கும் முன்னரே ஸ்மித் வாயிலாக சர்ச்சையில் சிக்கியது இந்த அணி. ஸ்மித்தும் பதவி விலகினார். இந்த நிர்வாகம் அஜின்க்யா ரஹானே அவர்களை தலைவராக அறிவித்தது.

தற்பொழுது தென்சபிரிக்காவின் அதிரடி பாட்ஸ்மானும், விக்கெட் கீபேரான ஹென்ரிச் கிளாஸ்ஸன் அவர்களை மாற்று வீரராக கோரியுள்ளது. எனினும் இன்னும் அதிகாரபூர்வமாக முடிவு ஏற்படவில்லை.

Heinrich Klassen

கிளாஸ்ஸன் தற்பொழுது நடந்து முடிந்த இந்திய தொடரின் பொழுது நமது ஸ்பின் பௌலர்களை அடித்து துவம்சம் செய்தவர். இவரது பேஸ் விலை 50 லட்சம் தான். ராஜஸ்தான் அணி ஸ்மித் அவர்களை 8 . 50 கோடிக்கு தக்கவைத்தனர், தற்பொழுது வெறும் 50 லட்சத்துக்கு மாற்று வீரரை கேட்டுள்ளார்கள். அடுத்த ஆண்டு ஸ்மித் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதால் அதிக வேலையில் வேறு வீரரை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள். ஏற்கனவே இரு விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் இந்த அணியில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top