பல்வேறு மாற்றங்களை கண்டு வரும் கிரிக்கெட்டில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 20-20 கிரிக்கெட் ரசிகர்களை ஆட்டிப்படைக்கிறது.

ஐ.பி.எல் தொடரில் கிரிக்கெட் வீரர்கள் நாளுக்குநாள் புதிய புதிய சாதனைகள் அரங்கேற்றி வருகின்றனர். இதில், அதிவேகமாக அரைசதம் கடந்த அசகாயசூரர்கள் பட்டியல் உங்களுக்காக.

அண்மையில் நடந்த பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் மைதானத்தையே அதிரவைக்கும் வகையில் ஆடிய சுனில் நரேன், 15 பந்துகளில் 50 ஓட்டங்களை கடந்து வாண வேடிக்கை நிகழ்த்தினார்.

இதேபோல், ஹைதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் யூசப்பதானும் 15 பந்துகளில் அரைசதம் கடந்துள்ளார்.

அடுத்தபடியாக, சுரேஷ் ரெய்னா பஞ்சாப் அணிக்கு எதிராக 16 பந்துகளிலும், கிரிஸ் கெயில் புனே அணிக்கு எதிராகவும், ஆடம் கில்கிறிஸ்ட் டெல்லி அணிக்கு எதிராகவும் தலா 17 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.