Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட்டவணையில் மாற்றமா? இரண்டு பகுதிகளாக நடக்கபோகிறதா ஐபில் 2019?
ஐபில்
லீக் கிரிக்கெட்டாக இருந்தாலும் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் போட்டி. சர்வேதச போட்டிகளில் உள்ளது போன்ற அனைத்துமே இதிலும் உண்டு. டிவி ஒளிபரப்பு,ஹாட் ஸ்டார் ஸ்ட்ரீமிங், உள்ளூர் மொழிகளில் வர்ணனை, கிளாமர் என்று எதிலும் குறை வைப்பதில்லை பிசிசிஐ. ஏப்ரல் , மே மாதங்களில் சம்மர் வெயிலை சமாளிக்க நல்ல ஒரு பொழுது போக்கு தான் இந்த ஐபில்.
11 வது சேஷனின் தாக்கமே முடிவதற்குள், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் போட்டிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019-ஆம் ஆண்டுக்கான 12-வது சீசன் ஐபிஎல் தொடர் முன்கூட்டியே தொடங்குகிறது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால், மார்ச் 29 ஆம் தேதியே தொடங்குமாம். அதில் முதல் 19 நாட்கள் இப்போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடக்குமாம். பின்னர் மற்ற போட்டிகள் இந்தியாவில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் 50 ஓவர் உலகக் கோப்பை அடுத்தாண்டு மே 30-ல் துவங்கும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. அதுவும் ஐபில் அட்டவணையை மாத்துவதற்கான முக்கிய காரணம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். எனினும் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு பல முன்னணி வீரர்கள் ஐபில் சீசனில் இருந்து விலகுவார்கள் என்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எப்படி பார்த்தாலும் பிசிசிஐ பொறுத்தவரை வீரர்கள் நலன், உலகக்கோப்பையை விட பணம் தான் முக்கியம் என்பது நாம் அறிந்ததே. எனவே பார்ப்போம் எப்படி இந்த இடையூறை சமாளிக்கிறர்கள் என்று.
