Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வருட IPL ஏலத்தில் இந்த 5 வீரர்களுக்கு தான் கடும் போட்டி!

இந்த வருட IPL போட்டியை உலகமே எதிர்பார்க்கும் நிலையில் இந்த வருடத்தில் இந்த 5 வீர்களை வாங்க போட்டி பலமாக இருக்கும்.

5.குர்னால் பாண்டியா:

கடந்த இரண்டு வருடமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரை அந்த அணி தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர்கள் ரோகித்,இவருடைய தம்பி பாண்டிய மற்றும் பும்ராவை நீட்டித்து கொண்டனர். கடந்த வருடம் மும்பை அணிக்காக 240ரன்களும் 10 விக்கெட்டும் எடுத்துள்ளார். அவருடைய பவுலிங் சராசரி 06.82. சிறந்த ஆல் ரவுண்டர் என்பதால் அவரை எடுப்பதற்கு கடும் போட்டி நிலவும்.

4.ரஷித் கான்

கடந்த வருடம் சன் ரைரசஸ் அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர். இக்கட்டான நிலையில் அந்த அணிக்கு கடந்த வருடம் விக்கெட் வேட்டை நடத்தினார்.

கடந்த வருடம் விளையாடிய 14போட்டியில் 17விக்கெட் வீழ்த்தினார். இவரின் சரசரி 06.62. இவரின் சிறப்பான ஆட்டத்தை பார்த்த ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பேஸ் போட்டியில் அடிலெயிடு அணிக்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

3.KL ராகுல்

கடந்த வருடம் தோல்பட்டை காயம் காரணமாக RCB அணியில் இவர் விளையாடவில்லை. 9வது IPLலில் இவரது அதிரடி காரணமாக RCB பைனல் வரை சென்றது. அந்த ஆண்டு 14போட்டியில் 397ரன்கள் விளாசினர். இவருடைய ஸ்டைக் ரேட்146.49 மற்றும் சராசரி 44.11. சிக்ஸர் அடிப்பதில் திறமையானவர் அதுவும் அதிக தூரம் அடிப்பதில். இவரை வாங்க கடும் போட்டி நிலவும் பட்சத்தில் RCB இவரை வாங்க முயற்ச்சிக்கும்.

2.சஹால்

கடந்த ஆண்டு அதிக விக்கெட் எடுத்த லெக் ஸ்பின்னார்.11 போட்டியில் 23விக்கெட் RCB அணிக்காக எடுத்தார்.2014 ஆண்டு இவரை வெறும் 10லட்சத்திற்கு வாங்கப்பட்டார். 2015 ஆண்டு அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடைத்தையும்.2016ஆண்டு 2வது இடத்தை பிடித்தார். இவரின் திறமையை பார்த்த கிரிகெட் வாரியும் இந்திய அணி இடம் கொடுத்தது.இவரையும் ஏலத்தில் எடுக்க கடம் போட்டி நடக்கும்.

1.DJ பிரவோ

வெஸ்ட் இண்டிஸ் அணியின் ஆல்ரவுண்டர் CSK அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்தார். பவுலிங்,பேட்டிங்,பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்க கூடியவர். சுலோ பவுலிங் போடுவதில் கில்லாடி. இந்த வருட ஏலத்தில் இவருக்கு தான் மவுசு அதிகம்.இதுவரை 106 IPL போட்டியல் 122விக்கெட் எடுத்துள்ளார். சராசரி 16.5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top