Sports | விளையாட்டு
இப்படி போடு மச்சி! ஐபிஎல்லில் தமிழில் பேசி விளையாடும் வீரர்கள்.! சுவாரசியமான சம்பவம்
கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கான போட்டியில் நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவம் வைரலாகியுள்ள.
ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்கள் பலர் கலக்கி வருகிறார்கள். வருண் சக்ரவர்த்தி, நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர், முருகன் அஸ்வின் என்று இளம் தமிழக வீரர்கள், அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களும் கலக்கி வருகிறார்கள்.
இவர்கள் எல்லோரும் ஒன்றாக ஆடும் நேரங்களில் தமிழில் பேசிக்கொள்வது வழக்கம். தினேஷ் கார்த்திக் அடிக்கடி தமிழில் பேசி வைரலாகி வருவார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன், கர்நாடகாவை சேர்ந்த ஷ்ரேயாஸ் கோபால் இருவரும் களத்தில் தமிழில் பேசிக்கொண்டனர்.
இருவரும் ராஜஸ்தான் அணிக்காக ஆடுகிறார்கள். கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ஷ்ரேயாஸ் கோபால் பவுலிங் செய்த போது, கீப்பிங் செய்து கொண்டு இருந்த சஞ்சு சாம்சன் தமிழில் பேசினார்.
நீ இப்படி போடு மச்சி, பந்தை உள்ளே போடு என்று சஞ்சு சாம்சன் தமிழில் பேசினார். இவர்கள் இப்படி தமிழில் பேசிய வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

ipl-top-5-player
