Sports | விளையாட்டு
ஐபிஎல் பிளே ஆப் விளையாடும் மைதானங்கள், போட்டி நேரம் முடிவானது- சந்தோஷத்தில் பௌலர்கள்
லேட்டாக தொடங்கினாலும் UAE யில் ஐபிஎல் 2020 புதிய சீசன் துவங்கி போட்டிகள் ஜரூராக நடந்து வருகிறது. இரண்டாம் பாதி தற்போது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது . இந்த சீசனில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என பலரும் யோசித்து வருகின்றனர்.
மூன்று டீம்கள் கிட்டத்தட்ட ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். டெல்லி காப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் நூலிழையில் தகுதி ஆகும் நிலையில் உள்ளனர்.

ipl2020
சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறிவிட்டது. அடுத்தபடியாக சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் டீம்கள் போராடி வருகின்றனர். கொல்கத்தா நயிட் ரைடர்ஸ், பஞ்சாப் டீம்களில் ஒன்று நான்காவது டீமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஐபிஎல் இன் போக்கே எப்படி வேண்டுமானலும் மாறும்.
இந்நிலையில் பிளே ஆப் இந்திய நேரப்படி 7 . 30 வழக்கம் போலவே துவங்குமாம். அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. மேலும் எந்த போட்டியும் ஷார்ஜா மைதானத்திலும் நடத்தவில்லை. எனவே டீம்களுக்கு பிளாட் பேட்டிங் ட்ராக் கிடைக்காது தான்.
IPL Playoffs Schedule
Qualifier 1: Team 1 vs Team 2, Dubai, on November 5
Eliminator:Team 3 vs Team 4, Abu Dhabi, on November 6
Qualifier 2:Winner of Eliminator vs Loser of Qualifier 1, Abu Dhabi, on November 8
Final:Winner of Qualifier 1 vs Winner of Qualifier 2, Dubai, on November 10
எனவே டீம்கள் 200 ஐ தொடுவது கடினம் தான். பௌலர்களுக்கு நிம்மதி பெருமூச்சு கட்டாயம் வரும்.
