Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஐபிஎல்லில் அதிகமாக கேட்ச் மிஸ் ஆகும் காரணம் தெரியுமா?

நடப்பு தொடர் ஐபிஎல்லில் ரசிகர்கள் அதிகம் வெறுக்கும் விஷயங்களில் ஒன்று முக்கியமான தருணங்களில் வீரர்கள் மிஸ் செய்யும் கேட்ச். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது தெரியுமா…

ஐபிஎல் 11வது சீசன் கடந்த மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பான கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.இருந்தும் இத்தொடரில் வெற்றி பெற வேண்டிய சில போட்டிகளை அணிகள் மிஸ் செய்ய தவறவிடப்படும் கேட்சும் முக்கிய காரணமாக இருக்கிறது. முன்பெல்லாம் அணிக்கு மொத்தமாக ஒரு கோட்ச் இருப்பர். ஆனால், தற்போது பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங், மெண்டல் கண்டிஷனிங் என எல்லாவற்றுக்கும் தனித்தனியாக ஒரு பயிற்சியாளர் இருக்கிறார்கள். இதனால், முக்கியமான போட்டிகளில் கேட்சை தவறவிடப்படும் வீரர்கள் இணையத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால், இது தெரிந்து செய்யப்படுவது இல்லை. நேராக அடிக்கப்படும் பந்துகளில் எந்த தவறும் நடப்பது இல்லை. ஆனால், சிக்ஸிற்காக மேலேறி பந்துகளை தான் வீரர்கள் பல முறை தவறவிட்டு இருக்கிறார்கள்.

இதற்கு கிரிக்கெட் ஆராய்ச்சியாளர்கள் மைதானங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் லைட்கள் சரியாக அமைக்காததே காரணம் எனக் கூறி வருகின்றனர். ஒரு மைதானத்தில் 16 லைட் டவர்கள் இருக்க வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது. அப்படி இருந்தால் மட்டுமே மைதானம் பிரகாசமாக இருக்கும். ஆனால், இந்தியாவில் மொஹாலி மைதானத்தில் மட்டுமே பதினாறு லைட் டவர்கள் அமைந்திருக்கிறது. மற்ற மைதானங்களில் நான்கு டவர்கள் மட்டுமே கொண்டிருக்கிறது. பெரும்பாலான ஐபிஎல் போட்டிகள் இரவு நேரத்தில் தான் நடத்தப்படுகிறது. அப்போது, மேல் நோக்கி அடிக்கப்படும் பந்துக்கள் கீழே வரும் போது தான் வீரர்களால் நன்றாக பார்க்க முடியும். ஆனால், அதன் சரியான பாதையை கண்டுபிடித்து கேட்ச் பிடிப்பது என்பது அதிகமான சுமையாக தான் அமையும். கிடைத்தால் லக் என்ற ரீதியில் தான்.

அது என்ன பதினாறு…நான்கு கணக்கு என கேட்குறீர்களா? மைதானங்களில் நான்கு டவர்கள் மட்டுமே இருந்தால் ஒளி குறிப்பிட்ட உயரத்தை விட அதிகமாக அமைக்கப்படும். இதனால், கீழிறங்கி வரும் வெள்ளை நிற பந்தின் திசையை சரியாக வீரர்களால் கணிக்க முடியாது. இந்த வகை டவர்கள் வெறும் வெளிச்சத்தை கொடுக்க வேண்டும் என்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டு இருக்கும். அதே நேரத்தில், அதிக டவர்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் மைதானங்களில் வெளிச்சம் கீழ்நோக்கி செல்லாமல், மைதானம் முழுவதும் சீராக பரவி இருக்கும். பந்தையும் எளிதில் பிடிக்க முடியுமாம்.

தெரிஞ்சிட்டீங்களா மக்கா! இனி பாவம் கிரிக்கெட் வீரர்களை திட்டாதீங்களே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top