சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்மில் விளையாட தோனி ரெடி! விசில் போட நீங்க ரெடியா ? - Cinemapettai
Connect with us

Cinemapettai

சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்மில் விளையாட தோனி ரெடி! விசில் போட நீங்க ரெடியா ?

News | செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்மில் விளையாட தோனி ரெடி! விசில் போட நீங்க ரெடியா ?

இன்று ராஜிவ் ஷுக்லா தலைமையில் கூடிய ஐ.பி.ல் கவர்னிங் கவுன்சில் ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில் அணி நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளை இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனால், அந்த அணியில் உள்ள வீரர்கள் வேறு அணிக்காக விளையாடினர்.

Rajasthan Royals & Chennai Super Kings

குஜராத் மற்றும் புனே என இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தண்டனை காலம் முடிவடைந்த நிலையில், 2018 ஐபிஎல் சீசனுக்கு இவ்விரு அணிகளும் களமிறங்க உள்ளன. இந்த ஆண்டுடன் தடைக்காலம் முடிவடைந்த நிலையில், சென்னை அணிக்கு பழைய படி தோனி திரும்ப முடியுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

RPS Dhoni

இந்நிலையில், ஐ.பி.எல் நிர்வாக கவுன்சில் அறிவிப்பின் படி, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 2 வருடங்கள் முன்பாக தங்கள் அணிக்காக ஆடியதில் அதிகபட்சமாக 5 வீரர்களை ஏலம் இன்றியே தக்க வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது .

CHENNAI SUPER KINGS

இதன்படி தல தோனியை சென்னை தக்கவைத்துக்கொள்ளும். அவர் மட்டுமன்றி  அஸ்வின்,  ரெய்னா,  பிராவோ ஆகியோரையும் சிஎஸ்கே  மீண்டும் தங்களுக்கு விளையாட வைக்க முடியும். இதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரகானே, ஸ்மித், பால்க்னர் ஆகியோரையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

அந்த ஐந்து வீரர்கள் கணக்கு விவரம்,,

அதிகபட்சம் 3 இந்திய சர்வதேச வீரர்கள்

அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள்

அதிகபட்சம் 2 உள்ளூர் வீரர்கள்

என்ற கணக்கில் தான் இருக்க வேண்டும். இது அணைத்து டீம்களுக்கும் பொருந்தும்.

Chennai Super Kings – Celebrating their victory

இங்கிலாந்து வேகப்பந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மற்றும் ஜேசன் ராய் போன்றவர்கள்  ஏலத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

இந்த லீக் நன்றாக வளர்த்துள்ளநிலையில், வருமானம் அதிகம் வந்துள்ளதால் அணி ஏலத்திற்காக செலவிடும் தொகை 66 கோடி ரூபாயிலிருந்து 80 கோடியாக உயர்த்தியும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு நடக்க உள்ள ஐ.பி.ல் போட்டிக்காக வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

இந்த அறிவிப்பு வந்ததும் தோனியின் சென்னை ரசிகர்கள் வலைத்தளங்களில் தல வருகையை கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top