Sports | விளையாட்டு
ஐ.பி.எல் முதல் நாள் மொத்த வருமானத்தையும் அள்ளி கொடுக்கும் தல தோனி… எதற்கு தெரியுமா?
ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் கிரிக்கெட்டை விரும்பாதவர்கள் கூட வெறித்தனமாக பார்க்கும் இந்த ஐ.பி.எல் மேட்ச்.
இந்த முதல் மேட்ச் சென்னையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வைத்து நாளை நடக்க இருகிறது. சென்னை மெரினா முழுவதும் ஸ்தம்பித்து நிற்கும் என்பதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இதில் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால் நாளை நடக்க இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் மூலம் விற்று தீர்க்கப்பட்ட அனைத்து டிக்கெட்டில் இருந்து வந்த வருமானத்தையும் புல்வாமா தாக்குதலில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட இருக்கிறது.
இதனை தல தோனி அவர்கள் காசோலையாக கொடுக்க இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கிரிக்கெட் பார்த்தா சோறு போடுவாங்க என்று கேட்பவர்களுக்கு இது ஒரு சவுக்கடி ஆகும்.
இதுபோன்ற நாட்டிற்காக விளையாடி ராணுவ வீரர்களுக்கு உதவி செய்யும் கிரிக்கெட் வீரர்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.
#CSK will donate the ticket sale revenue of their 1st home match – #CSKvsRCB to the families of #PulwamaTerrorAttack
The match was sold out in hrs..@msdhoni will present the cheque..
Kudos to #CSK for this kind and deserving gesture.. ??
— Cinemapettai (@cinemapettai) March 21, 2019
