fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஐபிஎல் எங்கள் உலக்கோப்பை கனவை நாசம் பண்ணி விட்டது.. அழுவாத குறையாக வெளியேறும் வீரர்கள்

ipl-complaints-worldcup

Sports | விளையாட்டு

ஐபிஎல் எங்கள் உலக்கோப்பை கனவை நாசம் பண்ணி விட்டது.. அழுவாத குறையாக வெளியேறும் வீரர்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடாமல் போனதற்கு காரணம் ஐபிஎல் போட்டி தான் காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் கிரிக்கெட் வீரர்கள் என்ன சொன்னார்கள் என்று பார்க்கலாம்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 30 தேதி தொடங்கியது. ஆனால் அதற்கு சிறிது நாட்களுக்கு முன்னாடி தான் ஐபிஎல் போட்டி முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சில வீரர்கள் சிறப்பாக விளையாடாமல் வெளியேறி  வருகின்றனர்.

அதற்கு காரணம் ஐபிஎல் போட்டி என்று ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில் மற்றொரு தரப்பினர் ஐபிஎல் போட்டி மூலம் தான் சில வீரர்கள் பார்மிற்கு வந்தார்கள் என கூறி வருகின்றனர்.

ஐபிஎல் போட்டி மூலம்தான் கெயில் பலன் அடைந்தார் என்று கூறலாம். ஐபிஎல் போட்டி மூலம் பயிற்சி பெற்று தற்போது உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று மற்றொரு தரப்பினர் ஐபிஎல் நன்மைகள் பற்றி கூறியுள்ளனர்.

உலக கோப்பை போட்டியில் அதிகம் பாதிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணியின் வீரர்கள் ரபடா, ஸ்டெயின் மேலும் மற்ற வீரர்கள் ஐபிஎல் போட்டியில் காயம் அடைந்து தற்போது உலக போட்டியில் விளையாட முடியாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்போது எங்கள் தோல்விக்கு அது ஒரு பெரிய காரணம் ஆகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஐபிஎல் போட்டி மூலம்தான் வார்னர், ஸ்மித், கெயில் போன்ற வீரர்கள் பார்மிற்கு வந்து சிறப்பாக விளையாடி வருவதாகவும் ஐபிஎல்  தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top