ஹைதராபாத்: ஐ.பி.எல். 10வது சீசன் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 15 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது.

10வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ரைசிங் புனே சூப்பர் ஜயண்ட் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அதிகம் படித்தவை:  இந்திய திரைப்பட வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் தேவி!

ஏற்கனவே 2 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 3-வது முறையாக சாதிக்கும் முனைப்பில் உள்ளது. இதேபோல் முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள புனே அணியும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகையாக 15 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 10 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் சிறந்த வீரர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.