ipl
 ஐபில்

பல நாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் ஐபிஎல் டி20 தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் கொண்டாட்டத்துக்கு டீம்கள் தங்களை ஆயத்தம் செய்ய ஆரம்பித்து விட்டனர். வரும் சீசன் தேர்தல் காரணமாக இந்தியாவில் நடப்பதற்கான சாத்தியம் குறைவே. தென்னாப்பிரிக்கா அல்லது துபாயில் நடக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில் சில அணிகள் பயிற்சியாளர்களை மாற்றியது. ட்ரான்ஸபார் அனைத்து அணிகளுக்கும் செய்துகொள்ளவும் வாய்ப்பு வழங்கியது. தவான் டெல்லி அணிக்கு மாறினார். விஜய் ஷங்கர் சன்ரைசர்ஸ் திரும்பினார். மந்தீப் சிங் பஞ்சாப் செல்கிறார். ராஜஸ்தான் ஜெயதேவ் உனட்கட் அவர்களை ரிலீஸ் செய்தது.

அதிகம் படித்தவை:  தோனியின் மோசமான ஆட்டம்.! கிரிக்கெட்டில் 2019 வரை தொடர ஆசை.. ஆனால் நிலைமை ?

ஐபில் அறிவிப்பு வந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஐபில் ஏலம் நடந்தபட்டாலே ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு எகிறிவிடும் .
தங்கள் பள்ளி, கல்லூரி, ஆபிசில் கணினி, அல்லது கைபேசி வைத்துக்கொண்டு எந்த வீரர் எவ்வளவு பணத்துக்கு எந்த டீம்மிடம் சென்றனர் என பார்ப்பது வழக்கம்.

ஏலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தான் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும். ஆனால் இந்த முறை டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியே ஐபிஎல் ஏலம் ஜெய்பூரில் நடத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  முடியல.....மும்பையின் வெற்றியை தடுக்க டெல்லியால் : ரபாடா, மோரிஸ் போர் வீண்!

அதுமட்டும்மன்றி அன்று தான் இந்தியா ஆஸ்திரேலியா மோதும் டெஸ்டின் ஐந்தாம் நாள் ஆட்டம். சென்ற ஆண்டு வரை காலை 9 – மாலை 6 வரை ஏலம் நடக்கும். இம்முரை மதியம் 3 – 9.30 மணியாக மாற்றியுள்ளது நிர்வாக கமிட்டி. இதன் முக்கிய காரணம் பலர் டிவியில் தங்குதடையின்றி பார்க்கவே.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் முழு தொடரும் ஆட மாட்டார்கள் என்ற நிலையில், எவ்வாறு ஸ்டர்டஜி அமைத்து அணிகள் டீம் எடுப்பார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.