ஐபில்

வரும் 2018 ஐபில் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் தற்பொழுது நடந்து வருகின்றது. ஏற்கனவே சிஎஸ்கே அணி தோணி, ரெய்னா மற்றும் ஜடேஜாவை தக்கவைத்தது. பிராவோ, அஸ்வின் இருவரை மேட்ச் கார்டு வாயிலாக எடுத்து விடுவார்கள் என்று அணைத்து தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

chennai ipl

எனினும் அது இன்று நடக்கவில்லை. அஸ்வின் அவர்களை கிங்ஸ் பஞ்சாப் அணி 7.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். சென்னை அணி மேட்ச் கார்டு பயன்படுத்தவில்லை.

R Ashwin

ஆனால் பிராவோ மற்றும் டு பிளெஸ்ஸிஸ் இருவரையும் மேட்ச் கார்டு வாயிலாக எடுத்து சென்னை.

எப்பொழுதும் தன்னை சென்னை பையனாகவே அடையாளம் படுத்திய அஸ்வின் தன் ஏமாற்றத்தை மறைத்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

“ஏலம் என்பது சூதாட்ட விடுதி போல தான். மகிழ்ச்சியாக உள்ளது கிங்ஸ் பஞ்சாப் தான் என் புதிய வீடு. நல்ல ஞாபகங்களை கொடுத்த சென்னை ஐபில் அணிக்கு என் நன்றிகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  குட்- பை ஜெர்சி நம்பர் 10 . பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.

சினிமாபேட்டை ரியாக்ஷன்

சென்னை அணி ஐபில் இல் இருந்து நீக்கப்பட்ட பொழுது புனே அணிக்கு தேர்வானார் அஸ்வின். ஒரு சீசன் மட்டும் விளையாண்டார். பின்னர் காயம் காரணமாக ஆடவில்லை. எப்பொழுது சிஎஸ்கே அணியை பெருமை படுத்தியே பேசுபவர் அஸ்வின்.

அதிகம் படித்தவை:  உலகக் கோப்பையை வென்ற அதே நாளில், ராணுவ சீருடையில் பத்மபூஷண் விருதை பெற்ற தோனி ! வைரல் வீடியோ உள்ளே !
ashwin-csk

இந்நிலையில் சென்னையில் அணியில் அவர் இடம் பெறாதது சென்னைவாசிகளிடம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்பது தான் உண்மை.

கவுதம் கம்பிர்

கொல்கத்தா அணி கம்பிர் அவர்களை தக்கவைக்கவில்லை. எந்த அணி எடுத்தாலும் விளையாட தான் தயார் என்றும் பேட்டி அளித்தார். இந்நிலையில் அவரை டெல்லி அணி எடுக்கும் என்று கிசு கிசுக்கப்பட்டது.

Gautam Gambhir

அதுவே நடந்தேறியும் உள்ளது. அநேகமாக இவர் தான் அணியின் கேப்டனாக இருப்பார் என்றும் தோன்றுகிறது.

மகிழ்ச்சியில் அவரும் பில்லா ஸ்டைலில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.