ஐபிஎல்

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு ஆண்டு தடை முடிந்து மீண்டும் களம் இறங்குகின்றனர். எனவே ஐபில் ஜோர் இன்னும் அதிகரித்துள்ளது.

rr – csk

சென்ற மாதம் நடந்த ஏலத்தில் பல்வேறு அணிகளுக்கு வீரர்கள் மாறினர். பல அணிகள் புதிய வீரர்களை எடுத்தனர். மேலும் பயிற்சியாளர் போன்ற அணைத்து விஷயங்களும் முடிவாகிவிட்டது .

IPL

இந்நிலையில் நேற்று இரவு ஐபில் ஆண்தேம் என்று அழைக்கப்படும் இந்த வருடத்துக்கான தீம் பாடல் வெளியானது. இந்த பாடலை பிசிசிஐ உடன் ஸ்டார் குழுமமும் இணைந்து உருவாகியுள்ளது. முதல் முறையாக இந்த பாடல் ஹிந்தி, தமிழ், பெங்காலி, கன்னடா, தெலுங்கு என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த “டான் மெஸ்” இயக்கியுள்ளார் . “ராஜீவ் பல்லா” இசையமைத்துள்ளார். சித்தார்த் பஸ்ரூர் ஐந்து மொழிகளிலும் பாடியுள்ளார்.

தகுதியில் சமமான அணிகள் மோதிக்கொள்வதாலும். இந்திய மற்றும் உலகத்தில் தலைசிறந்த வீர்கள் பங்கேற்பதாலும் “பெஸ்ட் vs பெஸ்ட்” என இப்பாடலுக்கு தலைப்பு வைத்துள்ளார்களாம்.