Sports | விளையாட்டு
காவேரி பிரச்சனைக்காக IPL தொகுப்பாளர் எடுத்த அதிரடி முடிவு.! யாராவது இப்படி செய்வார்களா.?
ஐ.பி.எல் போட்டி இந்தவாரம் தொடங்க இருக்கிறது ஐ.பி.எல் பேச்சு அடிப்பட்டதுமே ரசிகர்கள் உற்ச்சாகத்தில் இருக்கிறார்கள் பலத்த எதிர்ப்பார்ப்பும் நிலவுகிறது ரசிகர்களிடத்தில், மேலும் இரண்டு வருடத்திற்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடத்தில் தான் களம் இறங்குகிறது அப்படி என்றால் சொல்லவா வேணும் ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் நாட்டில் இந்த குஷியை கொண்டாட முடியாத நிலையில் தள்ளபட்டிருக்கிரார்கள் ரசிகர்கள், தற்பொழுது தமிழ் நாட்டில் காவேரி பிரச்சனை, ஸ்டர்லைட் என பல பிரச்சனை நடைபெற்று வருவதால் தமிழ்நாட்டில் உள்ள இளம் ரசிகர்கள் பலர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பல அரசியல் கட்சி தலைவர்களும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள், சமூக வலைதளமே போராட்ட பூமியாக மாறியுள்ளது எந்த நியூஸ் எடுத்தாலும் போராட்டம்தான் தலைப்பு செய்தியாக இருக்கிறது. மேலும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காவேரி பிரச்சனைக்காக ஐ.பி.எல் போட்டியை புறக்கணிப்போம் என கூறியுள்ளார் அதற்க்கு காரணம் போட்டியை புறக்கணித்தால் 50,000 பேர் அமரும் ஸ்டேடியத்தில் யாரும் இல்லை என்றால் அனைத்து மக்களின் கவனத்தையும் நம் போராட்டத்தின் பக்கம் ஈர்க்க முடியும் என கூறியுள்ளார்.
மேலும் ஐ.பி.எல் வர்ணன்னையாளரும் டிவி தொகுப்பாளருமான சுமந்த ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார், அதாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், இல்லை என்றால் அதற்கு இணையான தீர்வு வரும் வரை இனி ஐபிஎல் நிகழ்ச்சிகளை பார்ப்பதோ, நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் வர்ணனை செய்யப்போவது இல்லை என அதிரடியாக தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.
