இரண்டு குரூப்பாக பிரிக்கப்பட்ட ஐபிஎல் டீம்கள்.. புதிய விதிமுறைகள் யாருக்கு வெற்றி கொடுக்கும்!

ஐபிஎல் போட்டிகள் என்றாலே கொண்டாட்டம் தான். இம்முறை டாடா ஐபிஎல் ஆக மாறியுள்ளது, ஸ்பான்ஸர் மட்டுமே புதியது அல்ல லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என இரண்டு புதிய டீம்களின் என்ட்ரி நிகழ்ந்துள்ளது. கடந்த 2011 போல இம்முறையும் 10 டீம்கள் ஆடும் பார்மட். இம்முறை பிசிசிஐ அரபு எமிரேகம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா என எங்கு போட்டிகளை நடத்தும் என பலரும் விவாதித்து வந்த நிலையில் கோவிட் தொற்று குறைந்துள்ள நிலையில் இந்தியாவிலேயே போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளனர்.

8 டீம்கள் இருந்த சமயத்தில் ஒவ்வொரு டீமும் மற்ற ஏழு டீமுடன் ஹோம் மற்றும் அவே என இரண்டு முறை என்று மொத்தம் 14 போட்டிகள் ஆடுவர். இம்முறை மற்ற 9 டீம்களுடன் என 18 போட்டிகள் ஆடுவர் என நீங்கள் நினைத்தால் ஏமாற்றம் தான் உங்களுக்கு கிடைக்கும். 10 டீம்கள் இருக்கும் சூழலிலும் ஒவ்வொரு டீமும் 14 லீக் போட்டிகள் தான் ஆடவுள்ளனர், 7 ஹோம் மற்றும் 7 அவே என்ற ஸ்டைலில் தான். எனினும் போட்டிகள் மும்பை மற்றும் புனேவில் நடப்பதனால் இந்த கான்செப்ட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

இம்முறை குரூப் ஏ மற்றும் பி என பிரிக்கப்பட்டுள்ளது. கோப்பையை வென்றது அல்லது பைனலில் ஆடியது என்ற கணக்கை வைத்து டீம்கள் வரிசை படுத்த பட்டுள்ளன. ஏ க்ரூப்பில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் லக்னோ அணிகள் உள்ளன. பி க்ரூப்பில் சென்னை, ஹைதெராபாத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் குஜராத் டீம்கள் உள்ளன. கிட்டத்தட்ட 2011 ல் இருந்தது போன்ற பார்மட் தான், எனினும் இம்முறை குலுக்கல் முறையில் டீம்களை க்ரூப் பிரிக்கவில்லை.

70 லீக் போட்டிகள் தான் நடக்கவுள்ளது. சென்னை டீம் அதன் க்ரூப்பில் உள்ள ஹைதெராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் மற்றும் மும்பை (நேர்கோட்டில் உள்ள டீம்) என இந்த ஐந்து டீம்களுடன் தலா இரண்டு முறை என 10 போட்டிகள் ஆடுவர். மேலும் ஏ க்ரூப்பில் உள்ள கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் லக்னோ டீம்களுடன் தலா ஒரு முறை என நான்கு போட்டிகள் ஆடுவர்.

ipl groups

கொல்கத்தா என எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ராஜஸ்தான், டெல்லி, மும்பை, லக்னோ மற்றும் நேர்கோட்டில் உள்ள ஹைதெராபாத் என ஐந்து டீம்களுடன் 10 போட்டி. பி க்ரூப்பில் உள்ள சென்னை, பெங்களூரு, பஞ்சாப், குஜராத் டீம்களுடன் தலா ஒன்று என 4 போட்டிகள் ஆடுவர்.

ஒவ்வொரு டீமும் தலா நான்கு போட்டிகள் வாண்டக்கே மற்றும் டி வை பாட்டில் மைதானத்திலும், தலா மூன்று போட்டிகள்  ப்ராபர்ன் மற்றும் புனே அமைத்தனத்தில் விளையாடுவார்கள். போட்டிகள் மார்ச் 26 தொடங்கி மே 29 முடிகிறது. இறுதி நான்கு பிளே ஆப் போட்டிகள் எங்கு நடக்கும் என்பது பிறகு ஐபிஎல் நிர்வாகக்குழு முடிவு செய்யும்.