Sports | விளையாட்டு
ஐபிஎல்2020 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு.. சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் எப்போது தெரியுமா?
ஐபிஎல் 2020 ஆறு மாசம் இடைவேளைக்குப் பின் அடுத்த மாதம் தொடங்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்துவிட்டது. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஐபிஎல் இந்த வருடம் இல்லை என்று ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.
ஆனால் ஐபிஎல் தொடர் கண்டிப்பாக யுஏஇ-யில் வைத்து நடக்கும் என்றும் அபுதாபி, துபாய், சார்ஜா போன்ற இடங்களில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளதாம்.
போட்டிகள் நடைபெறுவதற்காக கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மாசக் அணிவது, சமூக இடைவெளி வீரர்களுக்கு அவ்வப்போது கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்வது என்று அனைத்திலும் தயாராக உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் வீரர்களின் உடல்நிலை சீராக உள்ளதா என்பதே பரிசோதித்துக் கொண்டே இருப்பார்களாம், தங்கும் ஹோட்டலில் 30 டிகிரி மட்டுமே AC உபயோகப்படுத்தப்படும்.
கிட்டதட்ட 53 நாட்கள் இந்த போட்டி நடைபெற உள்ளது, தற்போது எந்த அணியுடன் யார் மோதப்போகிறார் என்ற அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

ipl-2020-schedule
