fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

15 வீரர்களுடன் களம் இறங்கப்போகிறது ஐபில் டீம்கள்.. பவர் பிளேயர் கான்செப்ட் அறிமுகம்

Sports | விளையாட்டு

15 வீரர்களுடன் களம் இறங்கப்போகிறது ஐபில் டீம்கள்.. பவர் பிளேயர் கான்செப்ட் அறிமுகம்

சௌரவ் கங்குலி பிசிசிஐ பொறுப்பேற்ற பின் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என பலரும் எதிர்பார்த்து வந்தனர். அந்த வகையில் இந்தியா முதல் பகல் – இரவு டெஸ்ட் போட்டி இந்த மாதம் ஆடுகிறது.

இந்நிலையில் வரும் 2020 ஐபில் சீசனில் புதிய  மாற்றம் கொண்டு வர பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மேலும் இதன் சாத்தியம் குறித்து ஆலோசிக்க உள்ளனர். இந்த திட்டம் யாதெனில் போட்டி துவங்கும் சமயத்தில் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும். மைதானத்தில் 11 வீரர்கள் தான் ஆடுவர். எனினும் போட்டிக்கு இடையே தேவைப்படும் சமயத்தில் அம்பயரிடம் கூறிவிட்டு மாற்று வீரரை கேப்டன் களமிறக்கிக் கொள்ளலாம். அந்த மாற்று வீரரே பவர் பிளேயர். விக்கெட் விழும் சமயத்தில் அல்லது ஓவர் முடிந்த பின் இந்த மாற்று வீரரை நிர்வாகம் இறக்கலாம்.

ipl 2020

2020 ஐபில் சீசனில் இதனை அறிமுகபடுத்தவுள்ளனர். எனினும் முன்னதாக நம் லோக்கல் டி20 போட்டியான முஷ்டாக் அலி கோப்பையில் ட்ரயில் பார்க்க உள்ளனர்.

பேட்டிங் பொழுது கடைசி ஓவர் மட்டும் ஆட ஹிட்டர் பேட்ஸ்மேனை இறக்கலாம். அதே போல பந்துவீச்சில் ஸ்பெஷலிஸ்ட் பௌலர் அவர்களை இறக்கி விடலாம். இதனால் டீம் யுக்திகள் மாறும், டீமக்களுக்கு ஸ்ட்ராட்டஜி வகுக்க கடினமாகவும். ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மற்றும் சஸ்பென்ஸ் அதிகரிக்கும். வெளிநாட்டு வீரர்களை அசத்தலாக சப்ஸ்டிட்யூட் செய்யலாம்.

எனினும் ஐபில் டீம்கள் சம்மதிக்க வேண்டும். அதே போல் ஒரு முறை தான் இந்த பவர் பிளேயர் சப்ஸ்டிட்யூட் செய்ய முடியுமா ? அல்லது கால்பந்தாட்டம் போல 3 முறை சப்ஸ்டிட்யூட் செய்யலாமா ? போன்ற தகவலால் பிசிசியின் அறிக்கை பார்த்த பின்பே தெரியும்…

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top