Connect with us

Cinemapettai

கோடிக்கணக்கில் ஐபிஎல்-லில் ஏலம் எடுக்கப்பட்டு, மண்ணை கவ்விய 5 வீரர்கள்.. வீரேந்திர சேவாக் வெளியிட்ட ஷாக்கான லிஸ்ட்

virender-sehwag

Sports | விளையாட்டு

கோடிக்கணக்கில் ஐபிஎல்-லில் ஏலம் எடுக்கப்பட்டு, மண்ணை கவ்விய 5 வீரர்கள்.. வீரேந்திர சேவாக் வெளியிட்ட ஷாக்கான லிஸ்ட்

2020ஆம் ஆண்டில் பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பிற்கு பிறகு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முடிவில் மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது.

ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இந்த தொடருக்கான வரவேற்பு கடந்த பல ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சிறப்பாக செயல்படாத வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தற்போது பட்டியலிட்டுள்ளார்.

ஆரோன் பின்ச்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி வீரர் ஆரோன் பின்ச். இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு மோசமான தொடர் என்று கூறலாம்.

கிளென் மேக்ஸ்வெல்: ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். அதிரடியாக விளையாட கூடியவர், இந்த சீசனில் மிகவும் சொதப்பினார்.

ஆன்ட்ரே ரசல்: கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரசல். ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்துவர். இந்த சீசனில் தன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக சில போட்டிகளில் வெளியேயும் அமர வைக்கப்பட்டார்.

ஷேன் வாட்சன்: இந்த ஆண்டு தன்னுடைய ஓய்வை அறிவித்தவர் வாட்சன். இவர் தன்னுடைய 40 வயதிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் விளையாடிய இவர் சிறப்பான பங்களிப்பை ஏற்படுத்தவில்லை.

டேல் ஸ்டெயின்: காயம் காரணமாக பெங்களூர் அணியில் இருந்து பாதியில் விலகியவர் ஸ்டெயின். இவரும் தன்னுடைய மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

ipl 2020

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top