Sports | விளையாட்டு
ஐபிஎல் போட்டிக்கு ஆப்பு அடித்த மும்பை.. ஆட்டம் கண்டு போன கிரிக்கெட் வீரர்கள்
இந்த மாத இறுதியில் ஐபிஎல் 2020 தொடங்க உள்ளது, இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டி மும்பையில் வைத்து முதல் போட்டி நடைபெற உள்ளது.
கொரோன வைரஸின் தாக்கம் இந்தியாவில் இருப்பதால் மும்பை அரசு ஐ.பி.எல் டிக்கெட் விற்பதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ஒரு பக்கம் மற்றொருபுறம் பாதுகாப்பு கருதி இதனை தடை செய்துள்ளனர்.
முதல் போட்டியிலேயே பிரச்சனை தொடங்கிவிட்டதால் மற்ற மாநிலங்களில் இந்த போட்டி நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களாக தல தோனி கிரிக்கெட் பக்கம் வராத சூழ்நிலையில் அவரது ஆட்டத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தது தற்போது ஏமாற்றம்தான் மிஞ்சும்.
அதிகமாக மக்கள் கூடும் நிகழ்ச்சிகள், மால், சினிமா தியேட்டர் போன்ற முக்கிய பகுதிகள் மூடப்பட்டு வருவதால் ஐபிஎல் நடக்குமா என்பது சந்தேகம்தான். இதனால் மேட்ச் தள்ளி போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோன வைரஸ் அதிகமாக விளையாட்டு துறையை பாதித்துள்ளது, இதுமட்டுமல்லாமல் சினிமா வர்த்தகம் போன்ற அனைத்து துறையும் பாதிக்கப்பட்டு இந்தியாவின் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது.
