fbpx
Connect with us

புள்ளபூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு எதிர்பார்க்கல: கோலி!

புள்ளபூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு எதிர்பார்க்கல: கோலி!

பெங்களூரு: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் மோசமான தோல்விக்கு பின், பெங்களூரு கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பெங்களூருவில் நடந்த 46வது லீக் போட்டியில், பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பிர், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஹெட் (75*) கைகொடுக்க, அந்த அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் ருத்ரதாண்டவம் ஆடி பழக, பெங்களூரு அணி, மறுபடியும் சொந்தமண்ணில் மண்ணைகவ்வியது.

இதனால், மனசு உறுத்தலான உணர்ந்துள்ள, பெங்களூரு கேப்டன் விராட் கோலி, பெங்களூரு ரசிகர்களிடம் மனம் திறந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’ பெங்களூரு ரசிகர்களின் அளவில்லாத அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. எங்களின் முழுத்திறமையுடன் விளையாடாததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்,’ என அதில் குறிப்பிட்டிருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top