Tamil Cinema News | சினிமா செய்திகள்
டேய் நீ எல்லாம் இந்த லிஸ்டில் இருக்கய: ஸ்டோக்ஸை கலாய்த்த தோனி!
புனே: புனே அணி வீரர் தோனிக்கு ஆதரவாக பேசிய ஸ்டோக்ஸை, தோனி கலாய்த்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாவது தொடர் துவங்கி நடந்து வருகிறது. இத்தொடரில் பங்கேற்கும் ரைசிங் புனே அணி, கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்கிய நாள் முதல் ஒவ்வொரு சர்ச்சையாக தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது.
இதன் பின் தோனி மீது அந்த அணியின் உரிமையாளரின் சகோதரர் ஒரு மறமுகமான யுத்தமே நடத்தி வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், அந்த அணி அதிகபட்ச விலை கொடுத்து வாங்கப்பட்ட ஸ்டோக்ஸ், தோனிக்கு ஆதரவாக பேசினார்.
இந்நிலையில் , அணி நிர்வாகம் சார்பாகவும், தனியார் பெட்ரோல் நிறுவனம் சார்பாக ஜாலியாக ஒரு கேள்வி போட்டி நடத்தப்பட்டது. இதில் ஸ்டோக்ஸ், ரகானே,தோனி பங்கேற்றனர். இவர்கள் மொத்தம் 9 கேள்வி கேட்கப்பட்டது. அதில் ஸ்டோக்ஸ், அதிகபட்சமாக 7 கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லி வெற்றி பெற்றார். இதில் டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 250 ரன்கள் என்ற கேள்விக்கு தோனி பதில் தெரியாமல் முழித்தார்
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
