மெல்போர்ன்: டோணியின் அதிரடியை பார்த்து வாயடைத்து போன ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க், அவரை ஒரு அரக்கன் என வர்ணித்துள்ளார்.

மும்பைக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் குவாலிபையர்-1 போட்டியில் 26 பந்துகளில் 40 ரன்களை குவித்தார் டோணி. 18வது ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்த புனே, டோணி அதிரடி காரணமாக, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது.

20 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேற், டோணியின் இந்த அதிரடி முக்கிய காரணமாக இருந்தது.

நெருப்புடா

நெருப்புடா

இதுகுறித்து ஆஸி. முன்னாள் கேப்டன் கிளார்க் டிவிட்டரில் புகழ்ந்துள்ளார். ஒருமுறை அரக்கனாக இருந்தால் எப்போதுமே அவர் அரக்கன்தான். எம்எஸ் டோணி நெருப்புடா.. என குறிப்பிட்டுள்ளார்.

இரக்கமில்லா அரக்கன்

இரக்கமில்லா அரக்கன்

டோணி இப்போது அதிரடி வீரர் கிடையாது என்ற விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் கிளாக் இவ்வாறு கூறியுள்ளார். அரக்கன் என அவர் கூறியது, விளையாட்டில் எதிரணி மீது இரக்கம் இன்றி, அரக்கத்தனம் காட்டுவதாக கூறும், பாசிட்டிவ் கருத்து என்பது டோணி ரசிகர்களுக்கும் புரிந்துள்ளது. எனவேதான் ரீவிட் செய்து தள்ளுகிறார்கள்.

தொட்டதெல்லாம் வெற்றிதான்

தொட்டதெல்லாம் வெற்றிதான்

10 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதில், 7 முறை பைனல் போட்டியில் பங்கேற்கிறார் டோணி. வேறு எந்த வீரரும் இந்த சாதனையை செய்யவில்லை.
18 பிளேஆப் போட்டிகளில் டோணி ஆடியுள்ளார். இதில் 11 போட்டிகளில் அவர் சார்ந்த அணி வென்றுள்ளது. மும்பை இந்தியன்சுக்கு எதிரான பிளேஆப் போட்டிகளில் 8 முறை டோணி களமிறங்கியுள்ளார். அதில் 5 முறை இவரது அணியே வென்றுள்ளது.

டோணி காரணம்

டோணி காரணம்

புனேக்கு எதிராக நடப்பு ஐபிஎல் தொடரில் 3வது முறையாக மும்பை தோல்வியடைந்துள்ளது. 2014ல் சிஎஸ்கே அணி மும்பையே இதேபோல மூன்று முறை ஒரே சீசனில் புரட்டி எடுத்தது. பலம் வாய்ந்த மும்பையை ஒரே சீசனின் 3 முறை புரட்டி எடுத்த சிஎஸ்கே மற்றும் புனே ஆகிய இரு அணிகளிலும் பொதுவான ஒரே வீரராக, டோணி இடம் பெற்றுள்ளார் என்பது சிறப்பு.