மும்பை: தன்னைப்பற்றி அவதூறாக பதிவிட்டு வந்த புனே அணியின் உரிமையாளரின் சகோதரரை தனது பேட்டிங் மூலம் தோனி, வாய் அடைத்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இத்தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி, அதிரடியாக நீக்கப்பட்டார்.

https://twitter.com/hvgoenka/status/864550926748659714

இதுகுறித்து ஹர்ஸ் கோயின்கா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதில், ’தோனியின் வாணவேடிக்கையான பேட்டிங், சுந்தரின் சூப்பரான பவுலிங், ஸ்மித்தின் திறமையான தலைமை, புனே அணியை பைனலுக்கு தூக்கி சென்றுள்ளது,’ என பதிவிட்டுள்ளார்.

பின் போட்டிகள் துவங்கியது முதல், முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் புனே அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயின்காவின் சகோதரர், ஹர்ஸ் கோயின்கா டுவிட்டரில் அவரை குத்திக்காட்டுவது போல பதிவிட்டு வந்தார்.

முதலில் மந்தமாக இருந்த தோனியின் பேட்டிங், மும்பை அணிக்கு எதிரான பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் சூடு பிடித்தது. இதன் காரணமாக புனே அணி நேரடியாக பைனல் வாய்ப்பை பெற்றது. இந்நிலையி டுவிட்டரில் அவதூறாக பதிவிட்டு வந்த புனே அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயின்காவின் சகோதரர், ஹர்ஸ் கோயின்கா, தற்போது தல வழிக்கு பல்டி அடித்துள்ளார்.