ராஜ்கோட் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 188 ரன்களை குவித்துள்ளது.

10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 26 போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே ராஜ்கோட்டில் நடைப்பெறுகிறது

இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் ரெய்னா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார்.
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் மனன் ஓரா 2 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினார். மறுமுனையில் ஹசிம் ஆம்லா மீண்டும் ஒரு முறை சிறப்பான தன் ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

அதிகம் படித்தவை:  ‘ஷர்டுல் தாக்கூர்’ : எதிராக கிளம்பிய இந்திய ரசிகர்கள்..

மெதுவாக விளையாடிய ஷான் மார்ஷ் 24 பந்துகளில் 30 ரன்கள் மட்டும் எடுத்தார். மறுமுனையில் விரைவாக ரன்சேர்த்த மேக்ஸ்வெல் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதிகம் படித்தவை:  வெளியானது தோனி தலைமையில் 'காலா டீஸர்' சி எஸ் கே வெர்ஷன் !

அக்ஸர் படேல் அபாரம்:

இறுதி நேரத்தில் பட்டையை கிளப்பிய அக்ஸர் படேல் 17 பந்தில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசி 34 ரன்கள் எடுத்தார்.

20ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 188 ரன்கள் குவித்தது. குஜராத் அணிக்கு எதிராக அனைத்து அணிகளும் அதிக ரன்களை குவிப்பதும், அதற்கு குஜராத் அணியும் பதிலடி கொடுத்து, போராடி வெற்றி அல்லது தோல்வியை பெறுவதே வேலையாக வைத்துள்ளது.