அடுத்த வருடம் மீண்டும் களமிறங்க இருக்கும் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணியை வரவேற்கும் வேலையில் சென்னை ரசிகர்கள் இப்போதே ஈடுபட துவங்கிவிட்டனர்.

ஐ.பி.எல் டி.20 பங்கேற்ற  8 தொடர்களிலும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரு அணி என்ற பெருமையை பெற்றிருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை காலம் இந்த ஆண்டோடு நிறைவடைவதால், அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் மீண்டும் களமிறங்குகிறது, இதனை சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசனும் உறுதி செய்திருந்தார்.

சென்னை அணி மீண்டும் களமிறங்குவதற்கு இன்னும் ஒரு வருடம் இருந்தாலும் இப்போதிலிருந்த சென்னை அணியை வரவேற்கும் விதமான செயல்களில் ரசிகர்கள் ஈடுபட துவங்கிவிட்டனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை ரசிகர் ஒருவர் உருவாக்கிய சென்னை அணியின் கபாலி வெர்சன் வீடியோ;

CSK 2018

Get Ready for CSK 's Return !Here is a Goosebumps Video for all MSD fans !CSK daaa <3video by Vasan Rajeswaran

Posted by VeraLevel Videos on Tuesday, April 18, 2017