மும்பை: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த டாப் 10 வெளிநாட்டு வீரர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா. அவர்களை பற்றிய ஒரு அறிமுகமே இந்த செய்தி தொகுப்பு.

ஐபிஎல் தொடர் தொடங்கி பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இங்கு பேட்ஸ்மேன்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உள்நாட்டு வீரர்கள் வெளிநாட்டு டாப் பிளேயர்களுடன் ஆடி பழக இது ஒரு வாய்ப்பு. இதற்காக பல கோடி கொடுத்து வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள். பாகிஸ்தானை தவிர்த்து பிற அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இருந்தும் வீரர்கள் இங்கு இறக்குமதி செய்யப்படுகிறார்கள். இப்படிப்பட்ட வெளிநாட்டை சேர்ந்த அதிரடி நாயகர்களில் டாப் 10 பேட்ஸ்மேன் இவர்கள்தான்.

முதலிடத்தில் கெய்ல் முதலிடத்தில் கெய்ல்

இதில் முதலில் கொல்கத்தாவுக்கும், தற்போது பெங்களூர் அணிக்காகவும் ஆடிவரும் கிறிஸ் கெயில் டாப் இடத்திலுள்ளார் 97 ஐபிஎல் போட்டிளில் பங்கேற்றுள்ள கெய்ல், 3570 ரன்களை குவித்துள்ளார். 42.50 என்ற சராசரி ரன் குவிப்பு இதுவாகும். 21 அரை சதங்கள், 5 சதங்கள் விளாசியுள்ளார். 262 சிக்சர்களை விளாசி அதிக சிக்சர் விளாசிய தனி நபர் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

2வது இடத்தில் உள்ளவர் டேவிட் வார்னர். ஆஸி.யை சேர்ந்த இவர் 107 போட்டிகளில் 3655 ரன்களை விளாசியுள்ளார். சராசரி 39.30. இவர் 2009ம் ஆண்டு சீசனில் இருந்துதான் ஆடத் தொடங்கியுள்ளார். 2 சதங்கள், 34 அரை சதங்கள் இவருடையது. 144 சிக்சர்கள் விளாசியுளார்.

அதிகம் படித்தவை:  இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது ஒருநாள் போட்டியில் யாரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்கள்..!

மிஸ்டர் 360 டிகிரி

மிஸ்டர் 360 டிகிரி

மூன்றாவது இடம் 360 டிகிரி பேட்ஸ்மேன் டிவில்லியர்சுக்கு. 124 போட்டிகளில் ஆடி 3402 ரன்களை குவித்த டிவில்லியர்ஸ் சராசரி 39.55 ரன்கள். 133 இவரது உச்சபட்ச ஸ்கோர். 3 சதங்கள், 22 அரை சதங்கள் இவருடையது. 152 சிக்சர்களை பறக்கவிட்டவர் டிவில்லியர்ஸ்.

ஆல்ரவுண்டர் ஆல்ரவுண்டர்

ஆஸி. ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், 99 போட்டிகளில் ஆடி, 2612 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 31.85 ரன்கள். 2 சதங்கள், 14 அரை சதங்கள் விளாசியுள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது பெங்களூருக்காக ஆடிவரும் அவருடைய ஆட்டம் ஏனோ சொதப்பியுள்ளது.

அதிரடி சரவெடி அதிரடி சரவெடி

பிரெண்டன் மெக்கல்லம். பெயரை கேட்டதுமே ச்சும்மா அதிருதில்ல.. என்ற வசனத்திற்கு பொறுத்தமான அதிரடி வீரர் இவர். மெக்கல்லம் 158 ரன்களை விளாசி ஐபிஎல் தொடரையை ஆரம்பித்த பெருமைக்குரியவர். 99 போட்டிகள் ஆடி 2698 ரன்கள் குகவித்துள்ளார். 13 அரை சதங்கள், 2 சதங்ககள் விளாசியுள்ளார்.

கலங்கடிக்கும் பவுலிங்

கலங்கடிக்கும் பவுலிங்

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, 2009 முதல் மும்பை அணிக்காக ஆடி வருகிறார். 102 போட்டிகளில் 147 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2015 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.

அதிகம் படித்தவை:  ஐ.பி.எல் கோப்பை வேணும்னா இந்த வருடமே வாங்கிக்கோங்க.. அடுத்த வருஷம் சி.எஸ்.கே வருது!

அசரடித்த ஆல்ரவுண்டர்

அசரடித்த ஆல்ரவுண்டர்

தென் ஆப்பிரிக்க முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் கல்லீஸ், 2008-2014 வரையிலான காலகட்டத்தில் ஐபிஎல் தொடரில் 98 போட்டிகளில் ஆடி 2427 ரன்களை குவித்தவர். 89 இவரது பெஸ்ட். 17 அரை சதங்ள் விளாசியுள்ளார். 65 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது உள்ளார்.

சிஎஸ்கே செல்ல பிள்ளை சிஎஸ்கே செல்ல பிள்ளை

மே.இ.தீவுகளின் ட்வைன் பிராவோ, சிஎஸ்கே அணிக்காக ஆடியவர். பிறகு குஜராத்துக்காக ஆடியவர். தற்போது காயத்தால் விலகியுள்ள இவர், 106 போட்டிகளில் 1262 ரன்கள் குவித்ததோடு, 122 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆல்ரவுண்டரான இவருக்கு எப்போதுமே சிஎஸ்கே வாய்ப்பு வழங்கி வந்தது.

பலே பாண்டியா பலே பாண்டியா

மர்மமான ஸ்பின்னர் என்றழைக்கப்படும் மே.இ.தீவுகள் வீரர் சுனில் நரைன் தற்போது ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் களம் கண்டுள்ளார். 2012ல்தான் ஐபிஎல் தொடரில் காலடி எடுத்து வைத்தார். அந்த வருடமும், 2014லும் அவர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 74 போட்டிகளில் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர். எக்கனாமி ரேட் வெறும், 6.23தான்.