Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஐபிஎல் 11வது சீசனில் பட்டையை கிளப்பும் டாப் விக்கெட் கீப்பர்கள்…
ஒரு கிரிக்கெட் போட்டியில் அதிக சுமை விக்கெட் கீப்பருக்கு தான். அந்த வகையில் இந்த நடப்பு தொடரில் பேட்டிங் மற்றும் கீப்பிங் என டாப் கீயரில் இருக்கும் விக்கெட் கீப்பர்கள் யார் என தெரிந்து தான் கொள்ளுங்களேன்.

IPL 2018
விக்கெட் கீப்பர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வரும் முதல் பெயர் மகேந்திர சிங் தோனி தான். மின்னல் வேகத்தில் ரன் அவுட் செய்வதிலும், சில நொடிகளில் பந்தை பிடிப்பதிலும் என இந்த வயதிலும் அசால்ட்டு காட்டி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர்கள் பலர் ஸ்டெம்புக்கு முன்னும், பின்னும் என ஒரு சேர இரு இடத்திலும் கலக்கி வருகின்றனர். தோனியை போல பல விக்கெட் கீப்பர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அவர்களின் டாப் வரிசை இதோ…
2 ஆண்டுகள் தடைக்கு பிறகு திரும்பி இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர். இவர் இந்த நடப்பு தொடரில் இதுவரை ஆடிய போட்டிகளில் 415 ரன்கள் எடுத்து இருக்கிறார். கீப்பிங்கில் 9 கேட்ச் மற்றும் 1 ரன் அவுட் என முதலிடத்தில் இருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் இதுவரை சரியாக சோபிக்காத அணி என்ற துரதிஷ்டத்தை வைத்திருப்பது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். இந்த அணியின் விக்கெட் கீப்பராக இருப்பவர் குவின்டன் டிகாக். இவர் இதுவரை 7 கேட்ச், 3 ரன் அவுட் செய்து இருக்கிறார். விளையாடிய போட்டிகளில் மொத்தமாக 201 ரன்கள் எடுத்துள்ளார். இவரும் ஜோஸ் பட்லரும் போட்டா போட்டியில் இருக்கிறார்கள்.
நடப்பு சாம்பியன் மும்பை அணி வீரர் இஷான் கிஷண். கீப்பிங்கில் மற்ற அணிக்கு மத்தியில் இவர் கத்துக்குட்டி தான். 11 ஆட்டங்களில் இஷான் இதுவரை 238 ரன்கள் அடித்துள்ளார். அதை போன்று கீப்பிங்கிலும் 7 கேட்ச், 2 ரன் அவுட் என அசால்ட் காட்டி வருகிறார்.
நம்ம தல மகேந்திர சிங் தோனி. சென்னை அணிக்காக 9 வருடமாக விளையாடி வரும் தோனிக்கு விக்கெட் கீப்பிங் என்பது கை வந்த கலை. இந்த தொடரில் சென்னை அணி விளையாடிய போட்டிகளில் தாறுமாறான பார்மில் இருக்கும் தோனி இதுவரை 413 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 6 கேட்ச், 2 ரன் அவுட் செய்து இருக்கிறார்.
தமிழராக தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருக்கிறார். கையில் க்ளவுஸை போட்டாலும், ஸ்டெம்புக்கு முன்னர் பேட்டை பிடித்தாலும் தான் கில்லி என்பதை நிரூபித்து வருகிறார். இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய போட்டிகளில் 321 ரன்கள் எடுத்துள்ளார். கீப்பிங்கிலும் 6 கேட்ச், 2 ரன் அவுட் செய்துள்ளார்.

RCB
11வது சீசனின் முக்கிய வீரராக கருதப்படும் பஞ்சாப் அணியின் கே எல் ராகுல் 471 ரன்கள் அடித்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் விக்கெட் கீப்பராக நிற்கும் ராகும் இதுவரை 6 கேட்ச், 1 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
ஐபிஎல் நடப்பு தொடரின் அதிக ரன் குவித்து ஆரஞ்ச் தொப்பியை தன் வசம் வைத்திருப்பவர் ரிஷப் பந்த். இவர் தற்போது ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 521 ரன்கள் எடுத்து இருக்கிறார். விக்கெட் கீப்பராக ஐதராபாத்திற்கு வலு சேர்க்கும் பந்த் 3 கேட்ச், 1 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
