fbpx
Connect with us

Cinemapettai

ஐபிஎல் வரலாற்றின் டாப் 10 காஸ்ட்லி வீரர்கள் இவர்கள்தான்!

ஐபிஎல் வரலாற்றின் டாப் 10 காஸ்ட்லி வீரர்கள் இவர்கள்தான்!

சென்னை: ஐபிஎல் என்றாலே அது அதிரடிக்கு மட்டுமல்ல, பணத்திற்கும் பெயர் பெற்ற ஒரு ஆட்டம். வீரர்களையே கோடிகளில் ஏலம் எடுக்கும் இந்த ஆட்டத்தில் புரளும் பணத்தின் மதிப்பை எண்ணிப்பார்த்தால், தலைசுற்றும். இதுவரை 10 ஐபிஎல் தொடர்கள் அரங்கேறிவிட்டன. 2008ல் தொடங்கப்பட்ட இந்த பணக்கார விளையாட்டு தொடருக்கு தற்போது வயது 10 பிறந்துள்ளது. இதுவரையில் ஏலம் எடுக்கப்பட்டதிலேயே காஸ்ட்லியான வீரர்கள் யார், யார் என்பதை நீங்களும் அறிந்து கொள்ள சிறு ரிவைன்ட் போய் வரலாம், வாருங்கள்.

யுவராஜ்சிங்

இந்தியாவின் சிறந்த ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படுபவர் யுவராஜ்சிங். பேட்டை ஓங்கி எடுத்து வந்து சரியான டைமிங்கில் பந்தை டச் செய்து, கிரவுண்டை தாண்டி பந்தை பறக்க விடும் அழகை பார்க்கும்போது ரசிகர்ககள் ஆரவாரம் விண்ணைமுட்டும். 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து உலக சாதனை படைத்த இவர்தான் ஐபிஎல் வரலாற்றின் காஸ்ட்லியஸ்ட் வீரர்.

அடேங்கப்பா அமவுண்ட்

2015ல் யுவராஜை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.16 கோடிக்கு ஏலத்தில் வாங்கியபோது மொத்த கிரிக்கெட் உலகமும் வாய் பிளந்து நின்றது. முன்னதாக, 2014ல் இவரை பெங்களூர் அணி 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அந்த சீசனில் யுவராஜ் சாதிக்கவில்லை என்றபோதிலும், கூடுதலாக 2 கோடிக்கு ஏலம் போனார் இந்த சாதனை வீரர்.

திறமைக்கு மரியாதை

திறமைக்கு மரியாதை

இந்திய அணி ஜெர்சியில் அடிக்கடி காண முடியாத வீரர் என்றாலும் திறமைக்கு பஞ்சமில்லை இவரிடம். அவர்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கவுதம் கம்பீர். 2011ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு இவர் 2.4 மில்லியன் டாலர் செலவில் இவர் வாங்கப்பட்டார்.

பென் ஸ்டோக்ஸ் பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், தற்போதைய காலகட்டத்தில் ஒரு தென் ஆப்பிரிக்காவின் க்ளூசினர் போல பார்க்கப்படுகிறார். வேகப்பந்து ஆல்-ரவுண்டரான இவரை புனே அணி நடப்பாண்டு ஏலத்தில் ரூ.14.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

முகமது யூசுப் முகமது யூசுப்

2011ல் கொல்கத்தா அணிக்காக 2.1 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டவர் யுசுப் பதான். கம்பீருக்கு அடுத்து அதிக தொகைக்கு வாங்கப்பட்ட கொல்கத்தா வீரர் இவர்தான்
உத்தப்பாவுக்கு டிமாண்ட்

உத்தப்பாவுக்கு டிமாண்ட்

இந்தியாவின் ரிக்கி பாண்டிங் என அவரது பேட்டிங் ஸ்டைலுக்காக அழைக்கப்படும் ராபின் உத்தப்பாவை, புனே வாரியர்ஸ் அணி 2011ல் 2.1 மில்லியன் தொகைக்கு வாங்கியது. புனே வாரியர்ஸ் அணி கலைக்கப்பட்ட பிறகு கொல்கத்தாவுக்காக இவர் விளையாடி வருகிறார்.

தமிழக வீரர்

 

தமிழக வீரர்

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் 2.8 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டார். ஸ்பின்னர்களை இவர் அதிரடியாக எதிர்கொள்ளும் விதத்திற்காகவே தமிழகத்தை சேர்ந்த கார்த்திக்கிற்கு ரசிகர் கூட்டம் உண்டு. தற்போது பெங்களூர் அணிக்காக 1.75 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டு ஆடி வருகிறார் இவர்.

ரோகித் ஷர்மாவிடம் எதிர்பார்க்கிறோம்

ரோகித் ஷர்மாவிடம் எதிர்பார்க்கிறோம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2011ல் 2 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்ட மற்றொரு காஸ்ட்லி வீரர் ரோகித் ஷர்மா. இவர் அடித்தால் அதிரடி. படுத்தால் பாதாளம்தான். தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வாங்கிய பணத்திற்கு நியாயம் கற்பிக்க வேண்டும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்சில் கேப்டன் டோணியின் செல்லப் பிள்ளையாக விளங்கியவர் ரவீந்திர ஜடேஜா. இவரை, அந்த அணி 2 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் வாங்கியது.

இர்பான் பதான் இர்பான் பதான்

யூசுப் பதானின் சகோதரரும், இந்தியாவின் வாசிம் அக்ரம் என ஒரு காலத்தில் புகழ்பெற்றவருமான இர்பான் பதான், டெல்லி அணியால் 2011ல் 1.9 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.

சவுரப் திவாரி

சவுரப் திவாரி

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்பார்களே அதுபோல, பெங்களூர் அணியால் 1.6 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டவர்தான் சவுரப் திவாரி. இமாலய சிக்சர்கள் விளாசும் திறமையாளர் என்பதால்தான் இவருக்கு இந்த அளவுக்கு தொகை வழங்கப்பட்டதாக கூறுகிறார்கள் ஆர்.சி.பியன்ஸ்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top