India | இந்தியா
கைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..
IPhone குறைந்த விலையில் வருகிறது
உலக அளவில் புகழ்பெற்ற Iphone நிறுவனத்தின் குட்டியான போன் மாடல் Iphone SE மீண்டும் விற்பனைக்கு வர உள்ளது. இந்த போன் 2016ஆம் ஆண்டு முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது, மிகவும் கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த போன் 32GB மற்றும் 128GB என இரண்டு விதமாக மெமரியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மொபைலில் 4 இன்ச் தொடுதிரை மற்றும் 12MB ரியர் கேமரா வசதிகளுடன் உருவாக்கப்பட்டது. இந்த மொபைல் தற்போது விற்பனைக்கு இல்லாத நிலையில் ஆப்பிள் நிறுவனம் தன்னிடமுள்ள மொபைல் போன்களை கிளியரன்ஸ் செயலாகவிற்பதற்கு முடிவெடுத்துள்ளனர்.
விரைவில் இந்த போன் இணையதளம் மூலம் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த போனின் விலை சுமார் 21 ஆயிரம் ரூபாயிலிருந்து தற்போது 18 ஆயிரம் ரூபாயாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனை எதிர்பார்த்து பல Iphone ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
