மத்திய பிரதேச மாநிலம், மொரேனாவை சேர்ந்த ஒருவர் அப்பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துள்ளார்.

அப்போது மகாத்மா காந்தி உருவப்படம் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. இதனால் அதிர்ச்சிடைந்த அவர் அந்த நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றியிருக்கிறார்.

500,ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கைக்கு பிறகு இதுபோன்ற அவலங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அடிக்கடி ஏதாவது ஒரு ஏடிஎம்மில் ஒரு பக்கம் மட்டும் அச்சான ரூபாய் நோட்டுகள், காந்தி படம் இல்லாத நோட்டுகள், சீரியல் எண்கள் இல்லாத நோட்டுகள், கிழிந்த நோட்டுகள் என விதவிதமான செல்லாத நோட்டுகள் ஏடிஎம்மில் வருவது தொடர்கதையாகி விட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் அனைத்தும் மத்திய பிரதேச மாநிலத்தில் தான் அதிகளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசு இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது வருத்தத்திற்குரியது என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.