India | இந்தியா
ஆரம்பமானது மாருதியின் புதிய கார்.. விலை நம்ம பட்ஜெட்தான்
என்னதான் ஆட்டோமொபைல் வணிகம் சரிவை சந்தித்தாலும் அதனை விரும்பும் சிலர் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய ஒரு குடும்பத்திற்கு ரேஷன்கார்டு தேவைப்படுகிறதோ இல்லையோ ஒரு கார் கண்டிப்பாக தேவைப்படுகிறது.
இந்தநிலையில் மாருதி நிறுவனம் மிடில் கிளாஸ் மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு S-presso என்ற புதிய ரக மாடல் ஒன்றை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறது. இதன் தொடக்க விலை 3.69 லட்சம் ஆகும்.
தொடர்ந்து ஆட்டோமொபைல் மார்க்கெட் வணிகம் சரிந்து கொண்டே போகிறது. இதனால் பல கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடிப்படை விலை குறைய வாய்ப்புள்ளது.
இந்த மாடல் கார்கள் இந்திய சாலைகளுக்கு ஏற்ப உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் ஆட்டோமொபைல் சந்தையில் போட்டிகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. அனைத்து நிறுவனங்களும் புதுப் புது மாடல்களை மக்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு தயாரித்து அறிமுகப்படுத்தி வருகின்றன.

maruti
இந்த மாடல் கார், சரியாக மிடில்கிளாஸ் மக்களை மட்டுமே குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனத்தின் ஆரம்ப மாடல்கள் ஆல்டோ போன்றவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
