Tamil Cinema News | சினிமா செய்திகள்
பொண்டாட்டி பேச்சைக்கேட்டு டாப்ஸியை கழட்டிவிட்ட பிரபல நடிகர்.. கதிகலங்க வைக்கும் பல உண்மை!
2011ஆம் ஆண்டு வெளியான தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை டாப்ஸி.
இவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளிலும் பல படங்களை நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவருடைய சினிமா பயணத்தில் அனுபவித்த பல கசப்பான நினைவுகளை சமீபத்தில் பேட்டி ஒன்றில் மூலம் மனம் திறந்துள்ளார்.
அதில் ‘சினிமாவிற்கு வந்த புதிதில் தான் நடித்த படத்தின் ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்காததால் அந்த படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டனர்.
அதுமட்டுமில்லாமல் நான் இன்னொரு படத்தில் நடித்தபோது, நான் பேசிய வசனம் ஹீரோவிற்கு கொஞ்சம்கூட பிடிக்காததால், அந்த வசனத்தை மாற்றும்படி சொன்னதால், நான் அதை மறுத்தேன்.
இருப்பினும் டப்பிங் ஆர்டிஸ்ட் வைத்து எனக்கு தெரியாமலேயே அந்த வசனத்தை மாற்றி விட்டனர். அப்பொழுது எனக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்தது.
இவ்வாறுதான் இன்னொரு படத்தில் என்னுடைய அறிமுக காட்சி ஹீரோவின் அறிமுக காட்சியை விட பிரமாண்டமாக இருந்ததால் ஹீரோ தலையிட்டு எனது அறிமுக காட்சியை வேறு விதமாக மாற்றி அமைத்துவிட்டார்.
ஏனென்றால் அவரை விட நான் மிஞ்சி இருக்கக் கூடாது என்ற அடிமைத்தனம் தான். இதேபோல்தான் நான் நடித்த இன்னொரு படத்தின் ஹீரோவின் முந்தைய படம் சூப்பர் ஹிட் கொடுக்காததால், காரணமே இல்லாமல் என்னுடைய சம்பளத்தை குறைத்து விட்டனர்.
எனவே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதற்கு கதாநாயகர்கள் தயக்கம் கொள்கின்றனர்.

taapsee-cinemapettai
ஏனென்றால் அவர்களுக்கு சவாலாக நாங்கள் மாறிவிடுவோம் என்ற அச்சம்தான்’ இவ்வாறு டாப்ஸி தனது சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளை பேட்டி ஒன்றின் மூலம் உடைத்து பேசியிருப்பது கோலிவுட்டை அதிர வைத்துள்ளது.
